விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  யான் ஒட்டி என்னுள்*  இருத்துவன் என்றிலன்,* 
  தான் ஒட்டி வந்து*  என் தனி நெஞ்சை வஞ்சித்து,*
  ஊன் ஒட்டி நின்று*  என் உயிரில் கலந்து,*  இயல் 
  வான் ஒட்டுமோ?*  இனி என்னை நெகிழ்க்கவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

யான் - நான்
ஒட்டி - இசைந்து
என்னுள் - என்னுள்ளே
இருத்துவம் என்றிலன் - (எம்பெருமானை) இருத்துவதாக நினைத்திலேன்;
தான் - தானே

விளக்க உரை

 ‘யான் உடன்பட்டு, இறைவனை என் மனத்தில் இருக்கச் செய்வேன் என்று செய்தேன் அல்லேன் அவ்வாறு இருக்க, தானே சூளுறவு செய்து வந்து எனது ஒப்பற்ற மனத்தையும் தனது குணங்களாலும் செயல்களாலும் வசீகரித்து, பின் என் சரீரத்தில் பொருந்தி நின்று, நான் விலக்காது இருந்தமையைப் பார்த்த அளவில் என் உயிரிலே கலந்து இருத்தலையுடையவன் ஆனான்; அவ்விறைவன் இப்பொழுது நான் விலகிப்போவேன் என்றால் உடன்படுவானோ?’

English Translation

did not intend to hold him in my heart, He came of his own and occupied me fully. He has blended himself into my very flesh and breath, Will he decide to forsake me now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்