விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மயர்வு அற என் மனத்தே*  மன்னினான் தன்னை,* 
  உயர்வினையே தரும்*  ஒண் சுடர்க் கற்றையை,*
  அயர்வு இல் அமரர்கள்,*  ஆதிக் கொழுந்தை,*  என் 
  இசைவினை*  என் சொல்லி யான் விடுவேனோ?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மயர்வு அற - அஜ்ஞானம் தொலையும்படி
மன் மனத்தை - எனது நெஞ்சிலே
தன்னினான் என்னை - நித்யவாஸஞ் செய்பவனாய்
உயர்வினையே தரும் - (எனக்கு) ஞானபக்தி வளர்த்தியையே தந்தருள்கின்றவனாய்
ஒண் சுடர் கற்றையை - அழகிய தேஜோராசியாய்

விளக்க உரை

அறிவின்மையானது அடியோடு நீங்க என் மனத்தின்கண் நிலைபெற்று இருக்கின்றவனை, உயர்ந்ததான ஞானம் பத்தி முதலாயவற்றையே தருகின்ற அழகிய ஒளியின் தொகுதியாய் இருப்பவனை, மறதி என்பது என்றும் இல்லாத நித்தியசூரிகளின் இருப்பு முதலானவைகட்குக் காரணனாய் முதன்மையானவனாய் இருப்பவனை, எனது இசைவே தானாக இருக்கிறவனை என்ன காரணத்தைச் சொல்லி யான் விட்டு விலகுவேன்?

English Translation

Oh! How shall I give up my adorable Lord now? He drove out ignorance and entered my heart fully. The roof and stock of all the omniscient celestials, he gave me his radiant self-light and glorious virtues.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்