விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஐய புழுதி உடம்பு அளைந்து*  இவள் பேச்சும் அலந்தலையாய்ச்* 
    செய்ய நூலின் சிற்றாடை*  செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்* 
    கையினில் சிறுதூதை யோடு*  இவள் முற்றில் பிரிந்தும் இலள்* 
    பை அரவணைப் பள்ளியானொடு*  கைவைத்து இவள்வருமே.* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவள் - இச் சிறுபெண்ணானவள்;
ஐய புழுதியை - அழகிய புழுதியை;
உடம்பு அளைந்து - உடம்பிலே பூசிக்கொண்டு;
பேச்சும் அலந்தலை ஆய் - ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சையுமுடையளாய்;
செய்ய நூலின் சிறுஆடை - சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை;

விளக்க உரை

இவள் யௌவநபருவத்தை யடைந்திருந்தும் இவள் தாய்மார்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க. தலைமகனை வசப்படுத்துவது உடலழகாலேயாதல் உரையழகாலேயாதல் உடையழகாலேயாதல் கூடுவதாயிருக்க, உடலும் புழுதிடிந்து, சொல்லும்திருத்தமற்ற குதலைச் சொல்லாய், ஆடையும் செவ்வனுடுக்க அறியாத இப்போதைக்கு தலைவனோடு கைகலவி உண்டானவாறு என்கொல்? என்று அதிசயப்படுகிறபடி. இதற்கு உள்ளுறை பொருள் யாதெனில்; இவ்வாழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் “எம்பெருமானைச் சேரப்பெறுதற்கு வேண்டிய உபாயங்கள் பூர்ணமன்றியிருக்க, இவருக்கு அவ்விஷயத்திலுண்டாகிய அவகாஹம் என்னோ?” என்று சொல்லும் வார்த்தை - ஸ்வாபதேசம். எம்பெருமானைச் சேர்ந்து அநுபவித்தற்கு உபகரணமான சரீரம் பிரகிருதிஸம்பந்தத்தினால் சுத்த ஸாத்விகமாகப் பெறவில்லை; அவனுடைய ஸ்வரூப ரூபகுணாதிகளை அடைவுபடச்சொல்ல வல்லமையில்லை; “மடிதற்றுத் தான் முந்துறும்” (திருக்குறள்) என்றபடி அரையில் ஆடையை இறுக உடுத்துக்கொண்டு முந்துற்றுக் கிளம்பும் முயற்சியில்லை; (முயற்சியை அதன் காரணத்தாற் கூறினார்.) இந்திரியங்கள் போன்ற போகோபகரணங்களை மீறவில்லை; இப்படியிருக்க இவர்க்குப் பகவத் விஷயீகாரம் நேர்ந்தது. நிர்ஹேதுக கிருபையினாலத்தனையென்று அறுதியிட்டவாறு. ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானாலல்லது செல்லாமை இப்பாட்டில் வெளியாம். ஐய என்பதைப் பெயரெச்சமாகக் கொள்ளாமல், அஹஹ! என்னும் பொருளதாகக் கொள்ளவுங்கூடும். அலந்தலை - மயக்கம். செப்பன் - செப்பம் என்றதன்போலி. தூதை - மகளிர் மணலில் விளையாடும்போது மணலால் சோறு சமைப்பதாகப் பாவனை பண்ணுமிடத்து அந்த மணற்சோறாக்குகைக்குக் கருவியாவது; சிறுமுட்டியென்பர். முற்றில் - சிறுமுறம். இப்பாட்டில் “இவள்” என்ற சுட்டுப்பெயர் மூன்று தடவை பிரயோகித்தது என்னோவெனில்; பருவத்துக்கும் செயலுக்கும் உள்ள பொருத்தமின்மையை இவள் இவள் இவள் என்று பல தடவைகளால் காட்டுகிறபடி.

English Translation

She is covered with the dust of the playpen all over, her speech is broken, and she can hardly keep her red cotton Saree from falling. She has not left playing with her small pots and plates. Oh, she comes holding hands with the Lord who sleeps on a serpent couch!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்