விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆயர் கொழுந்தாய்*  அவரால் புடையுண்ணும்,* 
    மாயப் பிரானை*  என் மாணிக்கச் சோதியை,*
    தூய அமுதைப்*  பருகிப் பருகி,*  என்- 
    மாயப் பிறவி*  மயர்வு அறுத்தேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயர் கொழுந்து ஆய் - இடையர் தலைவானான கோபாலக்ருஷ்ணனாகிய
அவரால் - அவ்விடையர்களாலே
புடை உண்ணும் - வெண்ணெய்க் களவு முதலியவற்றிற்றாக அடியுண்கிற)
மாயம் பிரானை - மாயச்செயல் வல்லவனும்
என் - எனக்கு விதேயனும்

விளக்க உரை

‘ஆயர்களுக்குக் கொழுந்து போன்றவனாய் அவர்களால் அடியுண்ட ஆச்சரியமான செயல்களையுடையவன்; எனக்கு மாணிக்கம் போன்ற ஒளி உருவானவன்; தூய்மையான அமுது போன்றவன் ஆன எம்பெருமானை நுகர்ந்து நுகர்ந்து, எனது ஆச்சரியமான பிறவி காரணமாக வருகின்ற அறிவு இன்மையைப் போக்கினேன்,’ என்கிறார்.

English Translation

I drank deep from the ambrosia of my sweet Lord, wonder-Lord, gem-hued Lord, darling child of the cowherd clan who took their beating, all for stealing butte! Broken are the cords of ignorance that bound me to rebirth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்