விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வைப்பாம் மருந்து ஆம்*  அடியரை வல்வினைத்* 
  துப்பாம் புலன் ஐந்தும்*  துஞ்சக்கொடான் அவன்,*
  எப்பால் எவர்க்கும்*  நலத்தால் உயர்ந்து உயர்ந்து,* 
  அப்பாலவன் எங்கள்*  ஆயர் கொழுந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடியரை - தன்னடியாரை
வல்வினை - வலிய கருமங்களினுடைய
துப்பு ஆம் - மிடுக்கின் வழியிலே ஸஞ்சரிக்கிற
புலன் ஐந்தும் - பஞ்சேந்திரியங்களிலும் அகப்பட்டு
துஞ்சக் கொடான் - நசித்துப்õபோம்படி விட்டுக் கொடாதவன்

விளக்க உரை

 எந்தப் பகுதிகளிலுள்ள எத்தன்மையான உயர்ச்சியினையுடையவர்கட்கும் ஆனந்தத்தால் மேன்மேல் உயர்ந்து அப்பாற்பட்டவனும், எங்கள் ஆயர் குலத்திற்குக் கொழுந்து போன்றவனும், கொடிய வினைகளைச் செய்யத் தூண்டுகிற வலிமை பொருந்திய ஐந்து இந்திரியங்களாலும் அடியார்கள் வருந்தும்படி அவர்களை விடாதவனும் ஆன அவ்விறைவன், அடியார்கட்குச் சேமநிதியாவன்; தன்னை அடைவதற்குத் தடையாக உள்ள வினைகளை நீக்கும் மருந்தும் ஆவன்.

English Translation

The Lord of infinite virtues, beyond reach of person and place is the darling child of the cowherd-clan. He is the medicine and the wealth of devotees; he will not allow the power of the senses to ruin them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்