விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தரும அரும் பயன் ஆய*  திருமகளார் தனிக் கேள்வன்*
    பெருமை உடைய பிரானார்*  இருமை வினை கடிவாரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அ அரு பயன் ஆய - அப்படிப்படட் அருமைப் பயனான புருஷார்த்தத்தை
திருமகனார் தனிகேள்வன் - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாயகனாய்க் கொண்டு
தரும் - (பிராட்டியோடு கூடி நின்று) தந்தருள்வன்;
பெருமை உடைய பிரானார் - லக்ஷ்மீ சம்பந்தத்தாலே) மேன்மையை யுடைய (அந்த) ஸர்வேச்வரன்
இருமை வினை - இருவகைப்பட்ட (புண்ய பாபரூபமான) கருமத்தை போக்குவான்.

விளக்க உரை

தருமங்களினுடைய கிடைத்தற்கு அரிய பயன்கள் எல்லாம் ஒரு வடிவு கொண்டது போன்று இருக்கின்ற பெரிய பிராட்டி யாருக்கு ஒப்பற்ற கணவர்; திருமகள் கேள்வர் ஆகையாலே, வந்த ஒப்பற்ற பெருமையினையுடைய உபகாரகர்; ஆதலால், இருவினைகளையும் நீக்குவார்.

English Translation

He breaks the two-fold karmas and grants the highest fruit. The great celebrated Lord is peerless spouse of Lakshmi.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்