விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
  குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்* 
  குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
  குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இருண்டு சுருண்டு ஏறிய - கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த;
குழல் குஞ்சி - அலகலகான மயிர்களையுடையனான;
கோவிந்தனுடைய - கண்ணபிரானுடைய;
கோமளவாயில் - அழகிய வாயில்(வைத்து ஊதப்பெற்ற);
குழல் - வேய்ங்குழலினுடைய;

விளக்க உரை

-குழல் எனினும் குஞ்சி எனினும் கேசத்துக்கே பெயராயினும் இங்கு இரண்டையுஞ்ச் சேரச்சொன்னது ஒருவகைக் கவிமரபு; ‘மைவண்ண நறுங் குஞ்சிகுழல் பின்றாழ” என்றார் திருமங்கையாழ்வாரும்; “குழலளக முகந்தாழ” என்றார் பிறரும். குழன்றிராநின்ற மயிர் எனப் பொருள்கொள்க. கண்ணபிரானுடைய வாயமுதமானது, குழலூதும்போது அதன் துளைகளிலே நீர்க்குமிழிபோலக் குமிழ்த்து உடனே அது திவலையாகத் திரிந்து பரந்தபடியை முன்னடிகளால் கூறியவாறு. அவ்வாயமுதத்தைப் பெரியாழ்வார் தாம் ஸாக்ஷாத் அக்குழலினுடைய ஓசையின் யோக்யதை போன்ற யோக்யதையையுடைய சொற்களால் அருளிச் செய்தனராம். கண்ணபிரான் குழலூதினபடியைப் பரமரஸ்யமாகச்சொன்ன என்பது கருத்து. இப்பாசுரங்களைப் பயில்பவர் பரமயோக்யமாக உபன்யஸிக்கவல்ல வல்லமை பெற்று வாழாட்பட்டு நின்றார் குழுவினிற் புகப்பெறுவர் என்று பலன் சொல்லித் தலைக்க்கட்டினார். தமிழ் - தமிழினாலாகிய பாசுரங்கள்; கருவியாகு பெயர். ??????? வடசொற்றொடர். அடிவரவு:- நாவல் இடவான் தேனுகன் முன் செம்பெரும் புலி சிறு திரண்டு சுருங்குழல் ஐய.

English Translation

This decad of Tamil songs, sweet as the flute, by Vishnuchitta, King of Srivilliputtur, speaks of the river of ambrosia that came gushing through the holes of the flute that Govinda, with his dark curly tresses all over, placed on his tender lips and played. Those who master it will develop speech that excels the flute in coolness, and be counted in the motley group of saints.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்