விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அணங்கு என ஆடும் என் அங்கம்*  வணங்கி வழிபடும் ஈசன்*
    பிணங்கி அமரர் பிதற்றும்*  குணங்கெழு கொள்கையினானே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆணங்கு என ஆடும் - தைவாவேசங் கொண்டாற்போல ஆடுகின்ற
என் அங்கம் - எனது சரீரம்
வணங்கி வழிபடும் - சேவித்து ஆராதிக்கும்படி நின்ற
ஈசன் - எம்பெருமான் (எப்படிப்பட்டவனெற்றால்
அமரர் - நித்தியஸூரிகள்

விளக்க உரை

நித்தியசூரிகள் (இறைவனுடைய குணங்களைக் கூறத் தொடங்கி, ‘யான் முன்னர், யான் முன்னர்’ என்று ஒருவர்க்கொருவர்) மாறுபட்டுக் (குளிர்காய்ச்சல் வந்தவர்களைப் போன்று) பிதற்றுவதற்குக் காரணமான நற்குணங்கள் எல்லாம் பொருந்தியிருக்கும் தன்மையுடையவனான ஈசனை அனுபவித்துத் தெய்வம் ஏறியவர்களைப் போன்று ஆடுகின்ற எனது உடலானது எப்பொழுதும் அவனையே வணங்கி வழிபடாநின்றது.

English Translation

My body dances like a ghoul, worships and serves the Lord, repository of all virtues, that celestials argue and rave about!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்