விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மதுவார் தண் அம் துழாயான்*  முது வேத முதலவனுக்கு*
    எதுவே? என்பணி? என்னாது*  அதுவே ஆள் செய்யும் ஈடே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தண் - குளிர்ந்த
துழாயான் - திருத்துழாய்மாலையை அணிந்துள்ளவனும்
முதுவேதம் முதல்வனுக்கு - பழமையான வேதங்களால் முழுமுதற்கடவுளாகச் சொல்லப்பட்டவனுமான பெருமானுக்கு
எது பணி - (தகுதியாகச் செய்யக் கூடிய) கைங்கரியம் ஏது?
என் பணி ஏது - (அதிலும்) நான் செய்யக் கூடிய கைங்கரியம் ஏது?

விளக்க உரை

‘தேன் ஒழுகுகின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையைத் தரித்த பழமையான வேதங்களால் கூறப்படுகின்ற இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டுகள் எத்துணைப் பெருமை வாய்ந்தவை! ஆதலால், நான் செய்யும் தொண்டு யாது உளது?’ என்னாததுவே இறைவனுக்குத் தொண்டுகளைச் செய்தற்கு உரிய தகுதியாம்

English Translation

The cool fragrant Tulasi-wearing Lord is the Lord spoken of in the Vedas. Whole heartedness in devotion alone is the qualification to serve him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்