விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலே மாயப் பெருமானே!*  மா மாயவனே! என்று என்று* 
    மாலே ஏறி மால் அருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*
    பால் ஏய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்- 
    பாலே பட்ட இவை பத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பால் ஏய் தமிழர் - (அருளிச்செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமையுள்ள தமிழில் வல்லவர்களென்ன
இசைகாரர் - இசையறிந்து பாடவல்லவர்களென்ன
பத்தர் - பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும்
பரவும் - கொண்டாடும்படியமைந்த
ஆயிரத்தின் பால் - ஆயிரம் பாட்டினுள்

விளக்க உரை

‘மாலே, மாயப்பெருமானே, மா மாயவனே’ என்று பலகால் கூறி, தாம் தாழ்ந்தவர் என்று அகலும்படி பிச்சு ஏறி, பின் இறைவனுடைய திருவருளால் பொருந்தி நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த, பால் போன்று இனிய இயற்றமிழ் வாணரும் இசைத்தமிழ்வாணரும் பத்தர்களும் துதிக்கின்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் சிறந்து பொலிகிற இப்பத்துத்திருப்பாசுரங்களையும் கற்று அறிய வல்லவர்கட்கு, ‘நான் தாழ்ந்தவன்’ என்று நினைந்து அகலும் துன்பம் இல்லை என்கிறார்.

English Translation

This decad of the thousand songs of kurugur satakopan, praised by musicians, devotees and poets, a like fondly addresses the Lord of wonders, full of grace. Those who sing it will never suffer on earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்