விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து*  மாயப் பற்று அறுத்து* 
  தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்*  திருத்தி வீடு திருத்துவான்*
  ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி*  அகலம் கீழ் மேல் அளவு இறந்து* 
  நேர்ந்த உருவாய் அருவாகும்*  இவற்றின் உயிராம் நெடுமாலே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சார்ந்த- சேர்ந்திருக்கிற
இரு வல் வினைகளும் - (புண்யபாப ரூபங்களான இருவகைப்பட்ட வல்வினைகளையும்
சரிந்த - தொலைந்து
மாயம் பற்று அறுத்து - அஜ்ஞாந காரியமான விஷயஸங்கத்தையும் தவிர்த்து
தன்பால் தீர்ந்து மனம் வைக்க திருத்தி - தன்னிடத்திலே உறுதி கொண்டு நெஞ்சைப் பொருந்த வைக்கும்படி என்னைத் திருத்தி

விளக்க உரை

நிறைந்த அறிவின் ஒளியாகி, பத்துத்திசைகளின் அளவையுங்கடந்து, நுட்பமான மூலப்பகுதியும் உயிர்களுமாகிய இவற்றிற்கு அந்தராத்துமாவாய் இருக்கிற நெடுமால், பொருந்தி இருக்கின்ற இரண்டு கொடிய வினைகளையும் என்னை விட்டு நீக்கி, பொருள்களிடத்துள்ள ருசி வாசனைகளையும் நீக்கி, யான் தனக்கே உரியவனாகும் படி தன்னிடத்திலேயே மனத்தை வைக்குமாறு நன்னெறியிற் செலுத்தி, பின் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினையும் அலங்காரம் செய்யத் தொடங்கினான்.

English Translation

The Vaikunta-Lord of effulge knowledge, beyond size and shope and situation, pervades all things and beings, as the indwelling spirit of all. Driving out my twin karmas, he cut as under my Maya-bonds, then made me set my heart on him, faithfully.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்