விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்டாய் உலகு ஏழ் முன்னமே;*  உமிழ்ந்து மாயையால் புக்கு* 
    உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்*  உவலை ஆக்கை நிலை எய்தி*
    மண் தான் சோர்ந்தது உண்டேலும்*  மனிசர்க்கு ஆகும் பீர்*  சிறிதும்- 
    அண்டாவண்ணம் மண் கரைய*  நெய் ஊண் மருந்தோ? மாயோனே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயோனே - ஆச்சரிய குணசேஷ்டிதங்களையுடையவனே!
உலகு ஏழ் - ஏழுலகங்களையும்
முன்னமே உண்டாய் - முற்காலத்திலே திருவயிற்றிலே வைத்தாய்;
உமிழ்ந்து - அவற்றை வெளிப்படுத்தி
சிறு மனிசர் - அற்பமனிதருடைய

விளக்க உரை

உரை:1

‘ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனே, முற்காலத்தில் உலகங்கள் ஏழனையும் உண்டாய்; வெள்ளம் நீங்கிய அக்காலத்திலேயே அதனை உமிழ்ந்து, (பிற்காலத்தில்) சிறிய மனிதர்களுடைய தாழ்ந்த உடலை மேற்கொண்டு (ஆயர்பாடியில் ஒவ்வொரு வீட்டிலும்) நுழைந்து ஆசையால் வெண்ணெயினை உண்டாய்; (முன்னர் நீ உண்டு மீண்டு உமிழ்கின்ற காலத்தில்) அம்மண் திருவயிற்றில் சிறிது தங்கியிருக்குமேயாயினும் (மண்ணை உண்ணுகின்ற குழந்தைகட்கு வருகின்ற) சோகை என்னும் நோயானது சிறிதும் வாராதபடி அம்மண் கரைவதற்குப் (பிற்காலத்தில் மனித சரீரத்தோடு உண்ட) நெய் மருந்தாகுமோ?’ ஆகாது என்றபடி.

உரை:2

உன் மாயச் செயலால் ஏழுலகங்களையும் உண்டு பின் வெளிக் கொண்டுவந்தாய். சிறுமனித உடலை விரும்பிக் கண்ணனாக வந்தாய். வெண்ணை திருடி உண்டாய். எதற்காக அந்த நெய்யை உண்டாய் ? மண்ணை வயிற்றில் வைத்த காலத்தில் சோகை நோயை ஏற்படுத்திவிடும் என்பதற்காகவா ? அம்மண் கரைவதற்கு நெய் மருந்தாகுமா ? 

English Translation

O Lord who swallowed the seven worlds, and brought them out again! What a wonder, that you took birth as child Krishna, and ate butter by stealth, leaving not a trace behind! Was it expellant medicine for a little earth that had remained inside you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்