விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!*  விண்ணோர் தலைவா! கேசவா!* 
    மனை சேர் ஆயர் குல முதலே!*  மா மாயனே! மாதவா!*
    சினை ஏய் தழைய மராமரங்கள்*  ஏழும் எய்தாய்! சிரீதரா!* 
    இனையாய் இனைய பெயரினாய்!*  என்று நைவன் அடியேனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வினையேன் - பாபியான என்னுடைய
வினைதீர் - பாபத்தை ஒழிப்பதற்குரிய
மருந்து ஆனாய் - ஔஷமாயிருப்பவனே!
விண்ணோர் தலைவா - நித்யஸூரிநாதனே!
கேசவா - கேசவனே!

விளக்க உரை

தீவினைகள் வாய்ந்த என்னுடைய தீய வினைகளைப் போக்கும் மருந்தானவனே, நித்தியசூரிகள் தலைவனே, பிரமனையும் சிவனையும் உனது திருமேனியில் வைத்திருப்பவனே, மனைகளோடு மனைகள் சேர்ந்திருக்கின்ற ஆயர்பாடிக்குத் தலைவனே, மிக்க ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனே, திருமகள் நாதனே, கிளைகளையுடைய தழைகள் பொருந்திய ஆச்சாமரங்கள் ஏழனையும் ஓர் அம்பினால் தொளைத்தவனே, வீரலட்சுமியைத் தரித்திருப்பவனே, இத்தன்மைகளையுடையவனே, இவற்றிற்குத் தக்க பெயர்களையுடையவனே என்று கூறிக்கொண்டே உருகுவன் அடியேன்.

English Translation

O Madava, Lord who entered the cowherd-fold and became their chief! O Kesava, Lord of celestials, you are the medicine and cure for my despair! O Sridhara, you shot an arrow piercing seven dense trees! O Lord of many great acts and many names, I call and swoon calling you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்