விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மானேய் நோக்கி மடவாளை*  மார்பில் கொண்டாய்! மாதவா!* 
    கூனே சிதைய உண்டை வில்*  நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*
    வான் ஆர் சோதி மணிவண்ணா!*  மதுசூதா! நீ அருளாய்*  உன்- 
    தேனே மலரும் திருப்பாதம்*  சேருமாறு வினையேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் ஏய் நோக்கி மடவாளை - மானை நிகர்த்த பார்வையையுடையவளாகிய பெரியபிராட்டியை;
மார்பில் கொண்டாய் - திருமார்பிலே உடையனாய் (அது காரணமாக)
மாதவா - மாதவனென்ற திருநாமம் பெற்றவனாய்
கோவிந்தா - கோவிந்தனே!
வான் ஆர் சோதி - வானுலகம் இடமடையும்படியான ஒளியையுடைய

விளக்க உரை

மானின் பார்வை போன்ற பார்வையினையுடையளாகிய திருமகளை மார்பில் தரித்தாய் ஆதலின், ‘மாதவன்’ என்னும் திருப்பெயரையுடையவனே, மந்தரையினுடைய முதுகின் வளைவுமட்டும் போகும்படி உண்டைவில்லால் மார்பில் அடித்தவனான கோவிந்தனே, மோக்ஷ உலகம் முழுவதும் நிறைந்த ஒளியினையுடைய நீலமணி போன்ற நிறத்தையுடையவனே, மது என்னும் அரக்கனைக் கொன்றவனே, உன்னுடைய தேன் மலர்கின்ற திருவடித்தாமரைகளை வினையேன் சேரும்படி திருவருள் புரிவாய்.

English Translation

O Madava, Lord bearing the fawn-eyed dame Lakshmi O Govinda, who straightened the bow-like bends of Trivakra's body! O Madhusudana, gem-hued Lor of effulgent celestials LIGHT, hear me! Grant that this hapless self attain your nectar lotus-feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்