விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நினைந்து நைந்து உள் கரைந்து உருகி*  இமையோர் பலரும் முனிவரும்* 
    புனைந்த கண்ணி நீர் சாந்தம்*  புகையோடு ஏந்தி வணங்கினால்*
    நினைந்த எல்லாப் பொருள்கட்கும்*  வித்துஆய் முதலில் சிதையாமே* 
    மனம் செய் ஞானத்து உன் பெருமை*  மாசூணாதோ? மாயோனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயோனே! - ஆச்சரியனான எம்பெருமானே!
இமையோர் - (பிரமன் முதலிய) தேவர்களும்
முனிவரும் - (ஸநகன் முதலிய) ரிஷிகளுமான
பலரும் - பலபேர்களும்
நினைந்து - (உனது ணங்களைச்) சிந்தித்து

விளக்க உரை

கீழ்ப்பாட்டைக் காட்டிலும் இப்பாட்டு பரம விலக்ஷணமானது. கீழ்த் திருவாய்மொழிகளில் தாம் சொன்ன சொற்களுக்கு அநுதாபம் காட்டினார், கீழ்ப்பாட்டில். எம்பெருமானைக் கெடுத்துவிட்டேனென்று சொல்வதற்கும் நான் அதிகாரியல்லேனே; என் அதிகாரத்திற்குட்படாத வார்த்தையை நான் சொல்லிவிட்டேனே யென்று தடுமாறுகிறார். அதாவது என்ன? எனின்; ‘பகவத் விஷயத்தில் அதிகரிப்பதற்கு நான் அர்ஹனல்லேன்’ என்பதுதானே கீழ்ப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இங்ஙனஞ் சொல்லவேண்டுமானால் என்கிற நியாயத்தினாலே பகவத் விஷயத்தில் அதிகரிக்க ப்ரஸக்தி தமக்குண்டென்பது ஒருவாற விளங்கிவிடுகின்றது. அப்படி ஆக்ஷேபத : ப்ரஸக்தமாகிற அதிகாரமும். தமக்கு அஸஹ்யம் போலும்: நான் வாய் மூடிக் கொண்டிருக்க வேணுமேயன்றி வாய் திறந்து ‘அநர்ஹன்’ என்ற சொல்லுவதோடு ‘அர்ஹன்’ என்ற சொல்லுவதோடு ஒரு வாசியில்லை யென்று திருவுள்ளம் பற்றுகிறார். வேதத்தை அதிகரிக்கத்தகாத யோநியிலே பிறந்தவொருவன் “எனக்கு வேதம் தெரியாது” என்று உள்ளதையே சொல்வதுங்கூட அவத்யமாம்; ஏன்? வேதம் தெரிந்துகொள்வதற்குத் தனக்கு ப்ரஸக்தியுண்டுபோலவும் ஆனால் அதைத் தான் தெரிந்துகொள்ள முயலவில்லைபோலவும் அந்த வார்த்தையினால் தொனிக்ககூடும் மாதலால்.

English Translation

O My wonder Lord! You are the will and the seed of all creation, undiminishing, known to the heart alone! Sages and celestials faint in your contemplation. They offer worship with water, Sandal, incense, and flowers and count your glories with melting hearts, but never come to an end.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்