விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை*  அருவினையேன்- 
  களவேழ் வெண்ணெய் தொடு உண்ட*  கள்வா! என்பன்; பின்னையும்* 
  தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்*  வல் ஆன் ஆயர் தலைவனாய்* 
  இள ஏறு ஏழும் தழுவிய*  எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ் உலகின் - ஏழுலகத்திற்கும்
முதல் ஆய் - முதலாகிய
வானோர் இறையை - நித்யஸூரி நாதனான எம்பெருமானை
அரு வினையேன் - போக்வொண்ணாத பாபத்தையுடையோனாகிய நான்
நினைத்து - மனத்தினால் தியானித்து

விளக்க உரை

வளப்பம் பொருந்திய ஏழ் உலகங்கட்கும் காரணனாய நித்தியசூரிகள் தலைவனை, போக்கற்கு அரிய தீவினையினையுடைய யான் மனத்தால் நினைந்து, நினைப்பின் மேலீட்டால் உடல் கரைந்து, ‘களவு பிரசித்தமாம்படி வெண்ணெயைக் களவு செய்து உண்ட கள்வனே!’ என்று அழைப்பேன்; அதற்கு மேல், ‘முல்லை அரும்புகள் போன்று தோன்றிய பற்களையுடைய நப்பின்னைப்பிராட்டியாருக்காகப் பசுக்களையுடைய வலிய ஆயர்கட்குத் தலைவனாக, இளமை பொருந்திய எருதுகள் ஏழனையும் தழுவிக் கொன்ற எந்தையே!’ என்று அழைப்பேன்.

English Translation

Hapless me I saw the Lord of celestials, cause of the seven worlds, and faintly called, "O Rogue who ate butter by stealth", Then, "O strong herdsman who killed seven bulls for winning Nappinnai's Jasmine smile, O My lord".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்