விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உடல் ஆழிப் பிறப்பு வீடு*  உயிர் முதலா முற்றுமாய்க்* 
    கடல் ஆழி நீர் தோற்றி*  அதனுள்ளே கண்வளரும்*
    அடல் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    விடல் ஆழி மட நெஞ்சே!*  வினையோம் ஒன்றாம் அளவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உடல் - சரீரஸம்பந்தம்பெற்று
ஆழி - சக்ராகாரமாக
பிறப்பு - மாறி மாறிப்பிறக்கிற ஸம்ஸாரிநிலமும்
வீடு - மோக்ஷமும்
உயிர் - (இவற்றை அடைவதற்கு உரிய) ஆத்மாவும்

விளக்க உரை

‘ஆழ்ந்ததாய், சுவாதீனமாக உள்ள மனமே, உடலினுடைய வட்டமான பிறப்பு, அவ்வவ்வுடல்களில் தங்கியிருக்கின்ற உயிர்கள் முதலாகவுள்ள எல்லாவற்றையும் உண்டாக்குவதற்காக ஆழ்ந்துள்ளதான நீரையுடைய கடலை உண்டாக்கி, அக்கடல் நடுவண் யோகநித்திரை செய்கிற, பகைவரைக் கொல்லுகிற சக்கரத்தையுடைய இறைவனைக் கண்டால், இதனைச் சொல்லி, வினையினையுடைய நாம் அவனோடு சேருமளவும் அவனை விடாதேகொள்,’ என்கிறாள்.

English Translation

The Lord who is the cause of cyclic birth, and souls and all else, lies reclining in the peaceful ocean with a radiant discus in hand, Hapless we, shall tell him this when we see him, then merge into his. Till then, O Dark desolate heart, do stay on with me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்