விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாடாத மலர் நாடி*  நாள்தோறும் நாரணன் தன்* 
    வாடாத மலர் அடிக்கீழ்*  வைக்கவே வகுக்கின்று*
    வீடாடி வீற்றிருத்தல்*  வினை அற்றது என் செய்வதோ?* 
    ஊடாடு பனி வாடாய்!*  உரைத்து ஈராய் எனது உடலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊடு ஆடு - அங்குமிங்கும் நடையாடுகிற
பனி வாடாய் - குளிர்காற்றே!
நாடாத மலர் நாடி - தேடவொண்ணாத புஷ்பங்களைத் தேடி
நாள் தோறும் - தினந்தோறும்
நாரணன் தன் - ஸ்ரீமந்நாராயணனுடைய

விளக்க உரை

 ‘நடுவே திரிகிற குளிர்ந்த வாடைக்காற்றே, தேடுதற்கு அரிய பூக்களைத் தேடிக் கொணர்ந்து, நாடோறும் நாராயணனுடைய வாடுதல் இல்லாத மலர் போன்ற திருவடிகளில் வைத்து வணங்குவதற்காகவே அவன் இவ்வுயிர்களைப் படைத்தான்; அவ்வாறு இருக்க, ‘பிரிவிலே நிலைத்துத் தனியே தங்கியிருத்தலாகிற நல்வினையற்ற காரியம் என்ன பயைனைச் செய்வதோ?’ என்று அவனுக்குக் கூறி, தக்க மறுமொழி இல்லையாகில் மீண்டு வந்து எனது உடலை அறுக்கக் கடவாய்,’ என்கிறாள்.

English Translation

O Cool dew-breeze! This body is made for collecting flowers to place at the feet of my Lord Narayana everyday. Of what use is if to be separated from his thus? Go ask him this, then come back and spilt my bones.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்