விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீயலையே ? சிறு பூவாய்!*  நெடுமாலார்க்கு என் தூதாய்* 
    நோய் எனது நுவல் என்ன,*  நுவலாதே இருந்தொழிந்தாய்*
    சாயலொடு மணி மாமை*  தளர்ந்தேன் நான்*  இனி உனது- 
    வாய் அலகில் இன் அடிசில்*  வைப்பாரை நாடாயே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறு பூவாய் - சிறிய பூவையே!
நீ அலையே - நீ அல்லவோ? (இப்போது வேறுபட்டாயோ?)
நெடுமாலார்க்கு - ‘புருஷோத்தமனுக்கு
என் தூது ஆய் - என் தூதாகிச் சென்று
எனது நோய் - எனது பிரிவாற்றாமையை

விளக்க உரை

‘சிறிய நாகணவாய்ப் பறவையே, அடியரானார்க்கு இரங்கும் பெரும்பித்தரான தலைவர்க்கு என் தூதாகிச் சென்று, என் நோயினைச் சொல்வாய் என்று யான் கூறவும், கூறாமல் இருந்துவிட்டாய்; அதனால், காரியத்தைக் கெடுத்தது நீ அன்றோ? இப்பொழுது, யான் சாயலும் அழகிய மாமை நிறமும் நீங்கப் பெற்றேன்; இனிமேல் உனது வாயலகில் இனிய உணவினை ஊட்ட வல்லவர்களைத் தேடிக் கொள்வாய்,’ என்றவாறு.

English Translation

O My little mynah! I have lost my luster and my charms. Alas, even when I beseech you to go to my distant Lord and tell him of my grave sickness, you do not take notice! Better start looking for someone to feed you henceforth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்