விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்பு இழை கோப்பது போலப்*  பனி வாடை ஈர்கின்றது* 
    என் பிழையே நினைந்தருளி*  அருளாத திருமாலார்க்கு*
    என் பிழைத்தாள் திருவடியின்*  தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்* 
    என்பிழைக்கும்? இளங் கிளியே!*  யான் வளர்த்த நீ அலையே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்பு - எலும்பிலே
இழை - நூலிழையை
கோப்பதுபோல் - நுழைத்தாற்போல
பனி வாடை - குளிச்சிபொருந்திய வாடைக்காற்று
ஈர்க்கின்ற - வருத்துகின்றது;

விளக்க உரை

உரை:1

எலும்பினைச் செதுக்குகின்ற இளமை பொருந்திய கிளியே, எலும்பினைத் தொளைத்து அத்தொளையில் நூலினிழையைக் கோத்தலைப் போன்று, குளிர்ந்த வாடைக்காற்று அறுக்கிறது; என் குற்றங்களையே நினைந்து அருள் செய்யாத திருமகள் கேள்வனிடத்தில் சென்று, ‘சுவாமியான உம்முடைய பொறுமைக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று ஒரு வார்த்தை சொல்லல் வேண்டும்; நான் வளர்த்த நீ அல்லையோ?

உரை:2

(என் பிழை கோப்பதுபோல.) இத்திருவாய்மொழிக்கு இப்பாட்டு உயிர் நிலையாயிருக்கும். பிழைகளைப் பொறுத்தருளுந் தன்மையாகிற அபராத ஸஹத்வமென்னுங் குணம் பற்றாசாகத் தூதுவிடுகிறாளென்று அவதாரிகையிற் கூறினது இப்பாட்டைக் கணிசித்தேயாம். பிழைகளை அளவின்றிச் செய்துவைதபுது ‘அருளாழிப்புட்கடவீர் அவர்வீதி யொருநாள்’ என்றால் இது எப்படி ஸாத்யமாகும்? என்று எம்பெருமானுக்குக் கருத்தாகக் கூடுமென்று நினைத்த பராங்குசநாயகி, எங்கள் குற்றத்தை மாத்திரமேயோ பார்ப்பது. குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர்தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்கவேண்டவோவென்று சொல்” என்று தன்கிளியை இரக்கின்றாள். என்பு இழைக்கோப்பதுபோலப் பனிவாடை ஈர்க்கின்ற = எலும்பிலே துளைத்து நூலைக் கோத்தால் எவ்வளவு ஹிம்ஸையாயிருக்குமோ, அவ்வளவு ஹிம்ஸையைச் செய்கின்றது இந்தக் குளிர்காற்று என்றபடி. எலும்பின் ஸ்தானத்திலே தனது சரீரமும், நூலின் ஸ்தானத்திலே காற்றும் ஆகும். இதனால், இப்போது தனது சரீரம் எலும்பும் நரம்புமேயாம்படி மிகவும் மெலிந்து போயிற்றென்பதும் ஸூசிப்பிக்கப்பட்டதாகும். ‘ஈர்க்கின்றது’ என்னும் வினைமுற்று ஈறுகெட்டு ‘ஈர்க்கின்ற’ என்றிருக்கின்றது இனி, வினை முற்றாகக் கொண்டு பணிவாடையினாலே ஹிம்ஸிக்கப்படுகின்ற என்னுடைய’ என்றுரைத்தலுமொன்று.

English Translation

o My found parrot, you hurt me with your talk. Are you not my pet? The cool dew-breeze blows like a needle threading through my bones. Go and ask my un-relenting Lord, who sees my faults alone. "What wrong has she done, for not receiving your grace?"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்