விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்*  செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே* 
    சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*  ஊதுகின்ற குழல்-ஓசை வழியே* 
    மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து*  மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர* 
    இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா*  எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரண்டு எழு - திரண்டுமேலெழுந்த;
தழை - தழைத்திராநின்ற;
மழை முகில் - காளமேகம் போன்ற;
வண்ணன் - வடிவுடைய கண்ணபிரான்;
செம் கமலம் மலர் சூழ் - செந்தாமரைப் பூவைச் சூழ்ந்து படிந்துள்ள;

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் குழலூதும்போது அவனது திருமுகமண்டலத்தின் மேல் திருக்குழல்கள் தாழ்ந்தசைந்தன என்றும், அந்த நிலைமை செந்தமரைப் பூவில் வண்டுகள் படிந்திருப்பதை ஒக்கும் என்றுங் கூறுதல் முன்னடிகளின் கருத்து; “செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோற், பங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப”” என்றார் கீழும். முகத்தான் ஊதுகின்ற எனப்பொருள் படுதலால், குறிப்புமுற்று வினையெச்சமாயிற்று; முற்றெச்சம். மனிசர் காட்டு வழியிலகப்பட்டுக் கள்ளர்கையில் அடியுண்டு அறிவழியப்பெறுதல்போல, மான் கணங்கள் இக்குழலோசையாகிற வலைவைத்த வழியிலே அகப்பட்டு ரஸாநுபவபாரவச்யத்தினால் மெய்மறந்து அறிவழிந்து போகவே, புல்மேயமாட்டாதொழிந்துமன்றி, மென்று தின்பதற்காக வாயில் கவ்வியிருந்த புற்களும் உறங்குவான் வாய்ப்பண்டம்போல் தன்னடையே கடைவாய்வழியாக வெளியில் நழுவிவந்து விழுந்தன; அதுவுமன்றி, நின்ற விடத்தில் நின்றும் ஒரு மயிரிழையளவும் அசையமாட்டாமலுந் திகைத்து நின்றன என்றவாறு, துலுங்கா, புடை பெயரா-ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

உரை:2

கண்ணன் மேக நிறத்தை போல் இருப்பவன். செந்தாமரைப் பூவைச் சூழும் வண்டினம் போல் அவன் முகத்தில் இருண்ட முன் மயிர் விழுந்து தொங்கியது. மான் கூட்டங்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், அறிவிழந்து மேய்ச்சலை மறந்தன. வாயில் கவ்விய புல், கடைவாய் வழியே விழ, அசையாமல் சுவர் ஓவியம் போலச் செயலற்று நின்றன என்கிறார்.

English Translation

When the Lord of dark-cloud hue played his flute, with curls falling over his face like bumble bees hovering over a lotus, the music made the herd of deer stop grazing. Even the grazed grass slipped out of their mouth. Not moving this side or that, forward or backward, they stood like pictures on a wall.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்