விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நல்கித் தான் காத்து அளிக்கும்*  பொழில் ஏழும்; வினையேற்கே* 
    நல்கத் தான் ஆகாதோ?*  நாரணனைக் கண்டக்கால்*
    மல்கு நீர்ப் புனல் படப்பை*  இரை தேர் வண் சிறு குருகே!* 
    மல்கு நீர்க் கண்ணேற்கு*  ஓர் வாசகம் கொண்டு அருளாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண் சிறு குருகே - அழகிய சிறிய குருகே!.
தான் நல்கி - தானே அநுக்ரஹித்து
காத்து - அநிஷ்டங்களையெல்லாம் போக்கி
பொழில் எழும் - ஏழுலகங்களையும்
அளிக்கும் - ரக்ஷித்துக்கொண்டிருக்கின்றானெம்பெருமான்;

விளக்க உரை

மிக்குப் பெருந்தன்மை வாய்ந்த தண்ணீரையுடைய தோட்டங்களில் இரையாகிய மீன்களைத் தேடுகின்ற கொடையினையுடைய சிறிய குருகே! உலகங்கள் ஏழனையும் தானே விரும்பி அவற்றிற்கு விருப்பமில்லாதனவற்றை நீக்கிக் காப்பாற்றுகின்ற நாராயணனைக் கண்டால், எனக்குத் திருவருள் புரிதல்தான் தகாததோ என்று கூறி, அவர் கூறுகின்றது ஒரு வார்த்தையைக் கேட்டு வந்து, நிறைந்த நீர் பொருந்திய கண்களையுடைய எனக்குச் சொல்லியருளல் வேண்டும்.

English Translation

O Strong heron searching for worms in the watered groves! If you see my Lord Narayana, would you give him my message, Pray? He made the seven garden-worlds and tended them with love. Only this hopeless maiden tearfully stands unworthy of his touch.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்