விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் நீர்மை கண்டு இரங்கி*  இது தகாது என்னாத* 
    என் நீல முகில் வண்ணற்கு*  என் சொல்லி யான் சொல்லுகேனோ?*
    நன் நீர்மை இனி அவர்கண்*  தங்காது என்று ஒரு வாய்ச்சொல்* 
    நன் நீல மகன்றில்காள்!*  நல்குதிரோ? நல்கீரோ?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நீர்மை கண்டு - எனது ஸ்வபாவத்தை (நேரில்) பார்த்திருந்தும்
இரங்கி - (பிரிவு காலத்தில்) மனமிரங்கி
இது தகாது என்னாத - இப்படி நாம் பிரிந்திருப்பது தகுதியன்று என்றிராத
என் நீல முகில் வண்ணர்க்கு - நீளமேகத்தின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
என் சொல்லி - என்ன வார்த்தையைச்

விளக்க உரை

 ‘நல்ல நீல நிறத்தினையுடைய மகன்றில் என்னும் பறவைகளே, எனது தன்மையைக் கண்டிருந்தும், இரங்கி, பிரிந்து தங்கி இருத்தல் தகாதது என்று நினையாத, என்னுடைய நீல முகில் போன்ற நிறத்தினையுடைய தலைவர்க்கு என்ன வார்த்தையினைச் சொல்லி நான் சொல்லப் போகிறேன்? நல்ல உயிரானது இனி அத்தலைவரின் பொருட்டு அவளிடத்தில் தங்கியிராது என்று ஒருவார்த்தை சொல்லுதலைச் செயவீர்களா மாட்டீர்களா?’ என்கிறாள்.

English Translation

My cloud-hued lord does not notice my plight, nor take pity on me and say, "Oh, this is not proper", what more can I say? O Blue Curlews, go tell him that he has no goodness left in him, Would you, or would you not?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்