விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் செய்ய தாமரைக்கண்*  பெருமானார்க்கு என் தூதாய்* 
    என் செய்யும் உரைத்தக்கால்?*  இனக் குயில்காள் நீர் அலிரே?*
    முன் செய்த முழுவினையால்*  திருவடிக்கீழ்க் குற்றேவல்* 
    முன் செய்ய முயலாதேன்*  அகல்வதுவோ? விதியினமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இனம் குயில் காள் - கூட்டமான குயில்களே!
என் - என்னுடைய
செய்யதாமரைகண் - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய
பெருமானுக்கு - எம்பெருமானுக்கு
என் தூது ஆய் - நான் விட்ட தூதாகி

விளக்க உரை

உரை:1

கூட்டமாக இருக்கின்ற குயில்காள்! நீங்கள் அல்லீரோ? என்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய பெருமானிடத்தில் எனக்குத் தூதாகிச் சென்று, நான் கூறுவதனைக் கூறின் குற்றம் யாது உண்டாம்? முற்பிறவிகளிற் செய்த நிறைந்த பாவங்களால் திருவடிகளில் அண்மையிலிருந்து செய்யுந் தொண்டுகளைச் செய்வதற்கு முற்பிறவியிலேயே முயலாத யான் இன்னமும் அகன்று போமதுவோ முறை?’

உரை:2

கீழ்ப்பாடடில் நாரையைத் தூதுபோகுமாறு இரத்த தலைவி, அங்குப் போனால் சொல்லவேண்டிய செய்தியைச் சில குயில்களுக்குச் சொல்லுகின்றாள். ஒருவரை யழைத்துளிட்டு மற்றொருவர்க்கும் ஸமாச்சாரஞ் சொல்லுகிறவிதனால் மிக்க கலக்கம் விளங்கும். இத்தகைய கலக்கத்தை யுண்டுபண்ணுவதேயாயிற்று விஷயாந்தரங்களிக்காட்டில் பகவத் விஷயத்திற்குண்டான ஏற்றம். என் செய்ய தாமரைக்கட் பெருமானார்க்கு = எம்பெருமான் இப்போது உறவுறுத்துக்கொண்டு உபேக்ஷித்துப் போயிருக்க இந்த ஸமயத்தில் என் என்று உறவு கொண்டாடிக் சொல்லலாமோ? எனில்; அவன் கூடியிருந்த காலத்தில் அளவுகடந்த உறவு கொண்டாடி இவளிட்டவழக்காக இருந்ததனால் பிரந்தபோதிலுங்கூட- உறவு அறாமல் தொடருகிறபடி. அன்றியே, அவன் பிரிகிற மையத்தில் ‘எங்கு செல்லுகின்றீர்? எத்தனை நாளில் திரும்பிவருவீர்?’ என்று நாயகிகேட்பளே; அப்போது ‘நங்காய்! இந்த வஸ்து எங்குப் போனாலென்ன? எங்கிருந்தாலென்ன? உன்னுடைய சரக்கன்றோவிது’ என்று உத்தரங்கூறுவனாகையாலே அதனைநிதைன்து சொல்லுகிறபடியாகவுமாம்.

English Translation

O Flocking Koels! Would if hurt you to take a message from me to my lotus-eyed Lord? Come, are you not my good pets? Oh, my past misdeed, that I had never sought him so long!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்