விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!*  நீயும் நின் 
    அம்சிறைய சேவலுமாய்*  ஆஆ என்று எனக்கு அருளி*
    வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு*  என் விடு தூதாய்ச் சென்றக்கால்* 
    வன்சிறையில் அவன் வைக்கில்*  வைப்புண்டால் என் செயுமோ? (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் சிறைய - அழகிய சிறகுகளையுடைய
மடம் - இளமைதங்கிய (அல்லது, விதேயமான)
நாராயர் - நாரைப் பறவையே!
அளியத்தாய் - தயை பண்ணுதற்கு உரியாய்!
 

விளக்க உரை

அழகிய சிறகுகளையும் மடப்பத்தையுமுடைய நாரையே, அருளோடு கூடின நீயும், அழகிய சிறகுகளையுடைய நினதுசேவலுமாகி, ‘அந்தோ!’ என்று இரங்கி எனக்கு அருள் செய்து கொடிய சிறகுகளையுடைய புள்ளாகிய கருடனைக் கொடியிலே உயர்த்திய இறைவனிடத்தில் யான் விடுகின்ற தூதாகிச் சென்றால், உங்கள் முகம் பார்த்துக் கேளாமையாகிற கொடிய சிறையிலே அவன் வைத்தால், அவ்விருப்புக்கு நீங்கள் இசைந்திருப்பின் உங்களுக்கு அது என்ன குற்றத்தைச் செய்யும்?’ என்கிறாள்.

English Translation

O Frail crane, compassionate, with beautiful wings and a handsome matel would the two of you not pity my plight and take a message from me, to my Lord who rides the fierce Garuda bird? why, were he to cage you both, indeed, would that hurt you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்