விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அமரர்கள் தொழுது எழ*  அலை கடல் கடைந்தவன் தன்னை* 
    அமர் பொழில் வளங் குருகூர்ச்*  சடகோபன் குற்றேவல்கள்*
    அமர் சுவை ஆயிரத்து*  அவற்றினுள் இவை பத்தும் வல்லார்* 
    அமரரோடு உயர்வில் சென்று*  அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் - தேவர்கள்
தொழுது எழ - ஸேவித்து விருத்தியையடைய
அமரர் - பொருந்தின
பொழில் வளம் - சோலைவளமுள்ள
குருகூர் - திருக்குருகூரில் அவதரித்த

விளக்க உரை

இந்திரன் முதலான தேவர்கள் வணங்கி எழ, அலைகளையுடைய கடலைக் கடைந்தவனை, பொருந்திய சோலைகள் சூழ்ந்த ஞான வளப்பத்தையுடைய திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார், அண்மையிலிருந்து செய்த சொல் தொண்டாகிய, பொருந்திய சுவையையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களைப் பொருள் நுணுக்கங்களோடு கற்று வல்லவர்கள், நித்தியசூரிகளைப் போன்று உயர்விலே சென்று தமது பிறவியாகிற கொடிய சிறை நீங்கப் பெறுவர்.

English Translation

This decad of the sweet thousand songs by satakopan of dense-groved wealthy kulugur addresses the celebrated Lord of celestials, who churned the mighty ocean. Those who master if will rejoice in heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்