விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,*  இடம்பெறத் துந்தித் 
    தலத்து எழு திசைமுகன் படைத்த*  நல் உலகமும் தானும்
    புலப்பட*  பின்னும் தன் உலகத்தில்*  அகத்தனன் தானே 
    சொலப் புகில்*  இவை பின்னும் வயிற்று உள;*  இவை அவன் துயக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திசைமுகன் - நான்முகக் கடவுள்
திரிபுரம் எரித்தவன் - முப்புரங்களை எரித்தவனாகிய ருத்திரன்
வலத்தனன் - வலதுபக்கத்திலிருப்பான்;
பின்னும் - மேலும்
அவன் புலப்பட - அவன் கண்ணுக்கு இலக்காக

விளக்க உரை

எழுச்சியினையுடைய பிரமன், படைத்த நல்லுலகங்களோடு தானும் உந்தித்தாமரையில் இடம்பெற்றிருக்க, முப்புரங்களையும் எரித்த சிவபெருமான் வலப்பாகத்தில் இருக்கின்றான்; (தன்னைக் காண வேண்டும் என்று விரும்பும் அடியார்கள்) காணுமாறு தன்னுடைய உலகத்தில் தானாகவே வந்து அவதரிக்கின்றான்; இவனுடைய குணங்களைக் கூறப்புகுந்தால், மேலும் உள்ளே உள்ளேயாம்; (சொல்லி முடியா என்றபடி.) இவை எல்லாம் அவ்விறைவன் உங்களை மயங்கச் செய்யும்படி.

English Translation

Siva who burnt the three cities occupies the Lord's right. Brhama who made the seven spheres resides on his navel. Yet he is here within the Universe for all to see. Such are his wonders, the thoughts that fill my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்