விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாளும் நின்று அடு நம பழமை*  அம் கொடுவினை உடனே 
    மாளும்*  ஓர் குறைவு இல்லை;*  மனன் அகம் மலம் அறக் கழுவி*
    நாளும் நம் திரு உடை அடிகள் தம்*  நலம் கழல் வணங்கி* 
    மாளும் ஓர் இடத்திலும்*  வணக்கொடு மாள்வது வலமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மனனகம் - மனத்திலுண்டான
மல் அற - (மும்மூர்த்திகளும் ஸமமாவர் என்னும் விப்ரதி பத்தியாகிற) அழுக்கு ஒழியும்படி
கழுவி - விவேகத்தாலே பரிசுத்தப்படுத்தி
நாளும் - நாள்தோறும்
நம் - நமக்கென்றே உரிய

விளக்க உரை

‘பற்றப்படும் இறைவன் இவனோ, மற்றையவரோ! என்று) மனத்திலிருக்கும் ஐயமாகிய குற்றம் அறும்படி நீக்கித்தூய்மை செய்து, நம்முடைய திருமகள் கேள்வனுடைய நற்றாளை நாள்தோறும் வணங்க, எக்காலத்தும் நிலைபெற்று வருத்தும் நம்முடைய பழமையான மிகக்கொடிய வினைகள் உடனே அழியும்; அதற்குமேல் ஒரு குறைவும் இன்று; உயிர் உடலை விட்டு நீங்கும் இறுதிக்காலத்தும் வணக்கத்தோடு உயிரை விடுதல் சிறப்பினையுடையதாம்.

English Translation

Let us purge our hearts free from desires, and worship the radiant feet of the Lord, spouse of Lakshmi. Our past karmas will vanish, and we shall not want, Even if death comes, we shall die humbly and well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்