விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒன்று எனப் பல என*  அறிவு அரும்வடிவினுள் நின்ற* 
    நன்று எழில் நாரணன்*  நான்முகன் அரன் என்னும் இவரை*
    ஒன்ற நும் மனத்து வைத்து*  உள்ளி நும் இரு பசை அறுத்து* 
    நன்று என நலம் செய்வது*  அவனிடை நம்முடை நாளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறிவு அரு - அறிதற்கு அரிதான
வடிவினுள் - உருவுக்குள்ளே
நின்ற - நிலைத்திருக்கிற
நன்று - விலக்ஷணமான
எழில் - கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற

விளக்க உரை

உரை:1

ஒன்று என்றும் பல என்றும் அறிதற்கு அரிய வடிவிற்குள் நிற்கின்ற நன்றான எழிலையுடைய நாராயணணும், நான்முகனும், அரனும் என்னும் இவர்களை உங்கள் மனத்தில் சமனாக வைத்து ஆராய்ந்து, பிரமன் சிவன் இவர்களிடத்தில் நீங்கள் வைத்திருக்கின்ற பற்றினை நீக்கி, உங்கள் ஆயுள் உள்ள காலத்திலேயே அவ்விறைவனிடத்தில் நன்றான பத்தியைச் செய்யுங்கள்.

உரை:2

ஒன்று, பல என்று யாரும் அறிவதற்கு அரிதாக பற்பல வடிவில் நின்று அருளும் நற்குணங்களால் நிரம்பிய நாரணன், நான்முகன், அரன் என்னும் இந்த மூவரை ஒன்றி உம் மனத்தில் வைத்து என்றும் அவரைப் போற்றி பாவம், புண்ணியம் என்ற இரு பாசங்களையும் அறுத்து நன்று நன்று என்று நலம் செய்யும் நாளே நாமும் அவனும் கலந்து ஆனந்தம் அனுபவிக்கும் நாளாகும்.

English Translation

He pervades all forms, eluding count as one or as many. He is the radiant Narayana, the four-faced Brahma and Siva. Hold him in your hearts with steady devotion, shed all desires and serve him alone, that is the only good.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்