விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிணக்கற அறுவகைச் சமயமும்*  நெறி உள்ளி உரைத்த* 
    கணக்கு அறு நலத்தனன்*  அந்தம் இல் ஆதி அம் பகவன்*
    வணக்கு உடைத் தவநெறி*  வழிநின்று புறநெறி களைகட்டு* 
    உணக்குமின், பசை அற!*  அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெறி - வேதமார்க்கத்தை
உள்ளி - ஆராய்ந்து
உரைத்த - அருளிச் செய்த
கணக்கு அறு நலத்தனன் - எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவனும்
அந்தமில் ஆகி - முடிவில்லாத முதல்வனும்

விளக்க உரை

பிணக்கு அறும்படி (மறைகளிற்கூறியுள்ள பொருள்களின்) வழிகளை நினைந்து கூறிய கணக்கு இல்லாத நற்குணங்களையுடையவனும், முடிவில்லாத அழகிய ஆதிபகவனும் ஆன இறைவன் கூறிய வணக்கத்தையுடைய பத்தி நெறியிலே நின்று, அவன் விஷயமானது அறிவினால் (அறியவேண்டுவனவற்றை) அறிந்து, அவற்றுக்குப் புறம்பாக உள்ள வழிகளாகிற களைகளைப் பறித்து, பின்னும் அவற்றை ஈரமும் அற்றுப்போமாறு உலர்த்துங்கோள் என்றவாறு.

English Translation

Accept the method of the Vedas, and know him through realisation, He is the Lord without end, and beginning of all, spoken of therein. Give up all doubt and cut as under your attachments, for he resolves the conflicts in the six schools of thought.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்