விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு அரிய எம் பெருமான்* 
    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு எளிய எம் பெருமான்*
    பேரும் ஓர் ஆயிரம்*  பிறபல உடைய எம் பெருமான்* 
    பேரும் ஓர் உருவமும்*  உளது இல்லை இலது இல்லை பிணக்கே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேரும் - (விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும்
பிற - (அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும்
பல ஆயிரம் உடைய - அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தொற்றி
எம்பெருமான் - எமக்கு நாதனானவனாய்,
யாரும் - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்

விளக்க உரை

ஆயிரம் திருப்பெயர்களையும் அப்பெயர்கட்கு அமைந்த ஆயிரம் திருமேனிகளையும் உடைய எம்பெருமான், (தன் முயற்சியால் காணவேண்டுமென்று இருப்பவர்கள்) எத்தகைய உயர்ச்சி பெற்றவர்களாயினும், அவர்கட்கு ஒருபடியையுடையன் என்று அறிதற்கு அரிய எம்பெருமான் ஆவன்; (அவன் திருவருளால் காணவேண்டுமென்று இருப்பவர்கள்) மிகத் தாழ்ச்சி பெற்றலர்களாயினும், அவர்கட்கு அறிதற்கு எளிய எம்பெருமான் ஆவன்; ஆதலால், ஒரு பெயரும் ஓர் உருவமுங்கூட உள்ளது இல்லை அடியர் அல்லாதார்கட்கு; ஒரு பெயரும் ஓர் உருவமும் இல்லது இல்லை அடியார்கட்கு; இவ்வகையில் என்றும் மாறுபாடே என்றவாறு.

English Translation

My Lord is hard to see as the changeless one. My Lord is easy to see as the changeless one. My Lord bears a thousand names and forms. My Lord is opposed to name and form, being and non-being.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்