விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அமைவு உடை அறநெறி*  முழுவதும் உயர்வு அற உயர்ந்து* 
  அமைவு உடை முதல் கெடல்*  ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*
  அமைவு உடை அமரரும்*  யாவையும் யாவரும் தான் ஆம்* 
  அமைவு உடை நாரணன்*  மாயையை அறிபவர் யாரே?    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அமைவு உடை - நல்ல பலபரிபாகத்தையுடைத்தான
அறம் நெறி முழுவதும்- தருமமார்க்கம் எல்லாவற்றாலும்
உயர்வு அற உயர்ந்து - இதற்கு மேல் உயர்த்தியில்லை என்னும்படியாக மிகவுமுயர்ந்தவர்களாகி
அற - மிகவும்
நிலம் அது ஆம் - கைவந்திருக்கப் பெறுவதாகிற

விளக்க உரை

பயனோடு கூடியிருக்கின்ற அறத்தின் வழிகள் எல்லாவற்றிலும் உயர்வில் மிக உயர்ந்து, அமைதலையுடைய படைத்தல் அழித்தல் இடையிலே அழித்தல் ஆகிய இவற்றின் முடிவின் எல்லையில் நிற்கின்ற அறிவு ஆற்றல்கள் அமைந்திருக்கின்ற பிரமன் முதலிய தேவர்களும், அஃறிணைப் பொருள்களும் உயர்திணைப் பொருள்களும் ஆகிய எல்லா உயிர்களும், தானே ஆகும்படி பொருந்தி இருக்கின்ற நாராயணனுடைய பிறவியின் தன்மையினை அறிபவர் எவர்தாம்? ஒருவரும் இலர் என்றவாறு.

English Translation

Who can comprehend the wonders of Narayana? He bears the highest good of Vedic sacrifice. Forever the creates, destroys, and plays between the two. He contains the gods, and the livin and the lifelecc

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்