விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
  ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*
  தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
  அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒளி வரும் - ஒளிமல்கும்படியான
எளி வரும் இயல்பினன் - ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய்
வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும் - மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும்
ஒழிவு இலன் - எப்போதும் உடையவனான
இறையோன் - ஸ்வாமியானவன்

விளக்க உரை

இறைவன், குளிர்ந்த பக்குவமான திருவகுளோடே அடியார்கட்கு அகத்தனனாயும் அல்லாதார்க்குப் புறத்தனனாயும்சமைந்து, முதல் இல்லாதனவும் கேடு இல்லாதனவும் ஒளிவளரப்பெறுவனவும் ஆன நற்குணங்களையுடையவனாய், வீடாகிய தெளிந்த உலகத்தினைக் கொடுக்குந் தன்மை எக்காலத்தும் நீங்காதவனாய், ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பல பிறவிகளையுடையவனாய், எளிமை வருதலை இயல்பாகவுடையவன் என்பதாம்.

English Translation

Heedless of places and context, he appears in countless forms. His radiant fullness is beginning less and endless. Forever providing the ambrosial experience of liberation, he exists with cool grace within and without.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்