விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மத்தக் களிற்று*  வசுதேவர் தம்முடைச்* 
  சித்தம் பிரியாத*  தேவகிதன் வயிற்றில்*
  அத்தத்தின் பத்தாம் நாள்*  தோன்றிய அச்சுதன்* 
  முத்தம் இருந்தவா காணீரே* 
        முகிழ்நகையீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மத்தம் - மதத்தையுடைய;
களிறு - யானைகளை  நிவஹிக்குமவரான;
வசுதேவர் தம்முடை - ஸ்ரீவஸுதேவருடைய;
சித்தம் பிரியாத - மனத்தைவிட்டுப் பிரியாத;
தேவகிதன - தேவகியினுடைய

விளக்க உரை

உரை:1

மதம் கொண்ட யானைகளையுடைய வசுதேவரின் எண்ணத்தில் என்றென்றும் பிரியாது இருக்கும் தேவகிப் பிராட்டியின் திருவயிற்றில் ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாவது நாளான ஒரு நாளில் உலகத்தில் தோன்றிய இந்த அச்சுதனின் முத்து போன்ற மறை அங்கத்தைக் காணுங்கள். புன்னகையுடைய பெண்களே பாருங்கள்.

உரை:2

இப்பாட்டில் முத்தம் என்றது ஆண்குறியை. ‘மூத்ரம்’ என்னுஞ்சொல் மூத்திரம் பேய்வதற்கு உறுப்பான அவயவத்தைச் சொல்லிற்றாய், அச்சொல் முத்தமெனத் திரிந்திருப்பதாகச் சிலர் கூறுவர். சிறுகுழந்தைகளின் குறியைப் பேரன்புடையார் முத்தமிடுவார்கள் என்னுங் காரணம்பற்றி அக்குறிக்கு முத்தமெனப் பெயராயிற்றென்று சிலர் சொல்லுவர். அத்தத்தின் பத்தாநாள் - ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் (கீழ்முறையில் எண்ணிப்பார்த்தால்) ரோஹிணீ நக்ஷத்ரமும், (மேல்முறையில் எண்ணிப் பார்த்தால்) திருவோண நக்ஷத்திரமுமாம். இவற்றுள் ரோஹிணீ நக்ஷத்திரம் ஸ்ரீக்ருஷ்ணாவதார நக்ஷத்ரம் : திருவோண நக்ஷத்ரம் - தானான தன்மையிலுள்ள திருமாலுக்கு உரிய நக்ஷ்த்ரம். இன்ன நக்ஷரத்தில் தோன்றினவனென்று வாய்விட்டுச் சொல்லாமல் ‘‘அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய’’ என்று சொல்லுவானேன்? என்னில் : இவ்வாழ்வார் மங்களா சாஸநபரராகையினால் ‘கண்ணபிரானது திருவவதார நக்ஷரத்தை நேரே சொன்னால் சத்துருக்கள் அபிசாரம் செய்வார்களோ!’ என்ற அதிசங்கையினால் மறைத்துச் சொல்லுகிறாரென்று ரஸமாக நிர்வஹிப்பர்கள். (அபசாரமாவது - எதிரிக்கு மரணமுண்டாகுமாறு செய்யும் யாக விசேஷம். அதில் எதிரியின் பெயரை ஸங்கல்பத்திற் சொல்லும்போது ‘‘இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்த இன்னானுக்கு மரணமுண்டாக’’ என்று குறிப்பிட வேண்டிய அவசியமிருப்பதால், அதற்கு நக்ஷத்ர நிச்சயமுண்டாகாதபடி மறைத்துச் சொல்லுகிறாரென்றவாறு. ) தேவகிக்கு இட்ட விசேஷணத்தினால் - வஸுதேவருடைய மனம் கோணாதபடி, ஒழுங்காக நடப்பவள் தேவகி என்பது வெளியாம். வஸுதேவர் யானைகள் கட்டி வாழ்ந்தவராதலால் மத்தக்களிற்றுவசுதேவர் என்றார்.

English Translation

Softly smiling Ladies, come here and see the balls of this child Achyuta, born on the tenth day from Hastam, from the womb of Devaki, dear to Vasudev who owns mighty elephants.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்