விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உளன் எனில் உளன் அவன்*  உருவம் இவ் உருவுகள்* 
  உளன் அலன் எனில், அவன்*  அருவம் இவ் அருவுகள்* 
  உளன் என இலன் என*  இவை குணம் உடைமையில்* 
  உளன் இரு தகைமையொடு*  ஒழிவு இலன் பரந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உளன் எனில் - ஈச்வனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப்போலே) சொன்னாலும்
உளன் அலன் எனில் - ஈச்வரனில்லையென்று (நாஸ்திகர்களின்படியே) சொன்னாலும்
உளன் - ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்;
அவன் உருவம் அவன் அருவம் - அப்பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்;

விளக்க உரை

உரை:1

இறைவன் உளன் என்றால் உள்ளவன் ஆவான்; அப்பொழுது உருவத்தோடு இருக்கும் இப்பொருள்கள் எல்லாம் அவனுடைய தூல சரீரமாகும். இறைவன் இலன் என்றாலும் உள்ளவனே யாவான்; அப்பொழுது உருவம் இல்லாதனவாய் இருக்கும் இப்பொருள்கள் எல்லாம் அவனுடைய சூட்சும சரீரமாகும். ஆதலால், உளன் என்றும் இலன் என்றும் கூறப்படும் இவற்றைக்குணமாகவுடைமையின், உருவமும் அருவமும் ஆன தூல சூக்குமப் பொருள்களையுடையவனாய் எங்கும் ஒழிவு இல்லாதவனாகிப் பரந்து இருகின்றவனே ஆவான் என்பதாம்.

உரை:2

அவன் உண்டு என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் இருக்கிறான் (உளன்). இருக்கிறான், இல்லை என்னும் இரண்டு நிலைகளையும் உடையதாலே உருவமுள்ளவைகளும் உருவமற்றவைகளும் பெருமானின் ஸ்தூல சூட்சும சரீரமாக கருதப்படும். இவ்விரண்டு தன்மைகளோடு எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளவன் கடவுள்.

English Translation

Would you say he is, then he is, and all this is him. Say he is not, then too he is, as the formless spirit in all. With the twin qualities of being and non-being, he pervades all things and places forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்