விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சுரர் அறிவு அரு நிலை*  விண் முதல் முழுவதும்* 
  வரன் முதலாய் அவை*  முழுது உண்ட பரபரன்*
  புரம் ஒரு மூன்று எரித்து*  அமரர்க்கும் அறிவியந்து* 
  அரன் அயன் என*  உலகு அழித்து அமைத்து உளனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சுரர் அறிவு அரு நிலை - (பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான்
விண் முதல் முழுவதும் - மூலப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகலவஸ்துக்களுக்கும்
வரன் முதல் ஆய் - சிறநத் காரண பூதனாய் (அவற்றையெல்லாம் படைத்தவனாயும்)
அவை முழுது உண்ட - அவற்றையெல்லாம் (பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள
பரபரன் - பரம்புருஷன்

விளக்க உரை

 பிரமன் முதலிய தேவர்களாலும் அறிய அரிதான நிலையினையுடைய மூலப்பகுதி தொடக்கமாகவுள்ள எல்லாவற்றிற்கும் சிறந்த காரணமாகி, பின் அவற்றை எல்லாம் அழித்த பரபரன், சிவனாக இருந்து ஒப்பற்ற முப்புரங்களையும் எரித்து அழித்துப் பின் உலகங்களை எல்லாம் அழித்தும், பிரமனாக இருந்து தேவர்கட்கு ஞானத்தை உபதேசித்துப் பின் ஒரு காலத்தில் உலகத்தை எல்லாம் படைத்தும், அவ்விருவருடைய உயிர்களுக்குள் உயிராகத் தங்கியிருக்கின்றான்.

English Translation

Though He is every where, He cannot be seen, even by the gods. He is the first cause, the almighty, who swallowed all. He burnt the three cities, and granted wisdom to the gods, He is Brahma the creator, and Siva the destroyer too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்