விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திட விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசைப்*
    படர் பொருள் முழுவதும் ஆய்*  அவைஅவைதொறும்* 
    உடல்மிசை உயிர் எனக்*  கரந்து எங்கும் பரந்துளன்* 
    சுடர் மிகு சுருதியுள்*  இவை உண்ட சுரனே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திடம் - உறுதியான
விசும்பு - ஆகாசமென்ன
எரி - அக்நியென்ன
வளி - வாயுவென்ன
நீர் - ஜலமென்ன

விளக்க உரை

 உலகங்களை எல்லாம் முடிவு காலத்தில் அழியச் செய்த இறைவன், திடமான ஆகாயமும் நெருப்பும் காற்றும் நீரும் நிலமும் ஆகிய இவற்றைக் காரணமாகக் கொண்டு படர்ந்த எல்லாப் பொருள்களும் தானேயாகி, அவ்வப்பொருள்கள்தோறும் உடலுக்குள் இருக்கின்ற உயிரைப்போன்று மறைந்து, எங்கும் பரந்தவனாய் ஒளிமிக்க வேதத்துள் தோன்றுகின்றவன் ஆவான்.

English Translation

The Lord of the Vedas who swallowed the Universe is manifest as Fire, Earth, Water, sky and Air. He is there in all the things made of these, hidden, like life in the body, everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்