விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அவரவர் தமதமது*  அறிவு அறி வகைவகை* 
  அவரவர் இறையவர்*  என அடி அடைவர்கள்*
  அவரவர் இறையவர்*  குறைவு இலர் இறையவர்* 
  அவரவர் விதிவழி*  அடைய நின்றனரே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தம தமது - தங்கள் தங்களுடைய
அறிவு - ஞானத்தாலே
அறி - அறியப்படுகிற
வகை வகை - பலபல படிகளாலே
அவரவர் - அந்தந்த தெய்வங்களை

விளக்க உரை

உரை:1

‘முக்குணங்களின் வசப்பட்ட உலக மக்கள், தாம் தாம் அறிந்த அறிந்த வகையாலே, அந்த அந்தத் தேவர்களே இறைவர் ஆவர் என்று நினைத்து, அவர்களுடைய பாதங்களையே பற்றுக்கோடாக அடைவார்கள்; அவர்களால் அடையப்படுகின்ற அவ்வத்தேவர்களும், இறைவர் என்று கூறப்படுவதற்கு யாதொரு குறையும் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள்; ‘காரணம் யாது?’ எனின், அத்தேவர்கள் தங்களுடைய ஆகமங்களில் விதித்து வைத்த வழியால் அவர்களை வணங்குகின்ற மக்கள் தாம் தாம் விரும்பிய பலனைப் பெறும்படியாக, அத்தேவர்களுடைய உயிருக்குள் உயிராய் நின்று திருமகள் கேள்வனான நாராயணன் திருவருள் புரிகின்றான் ஆதலால்’ என்றவாறு.

உரை:2

அவரவர் தங்கள் தங்கள் ஞானத்தால் அறியும் வகைவகையான தெய்வங்களை நம் தெய்வங்களாக அடி பணிவார்கள். அந்த அந்த தெய்வங்களும் குறையில்லாதவர்கள்தாம். அவர்களுடைய விதிமுறைகளின் வழியாக அத்தெய்வங்களை அடையமுடியும். இந்த நேரடியான அர்த்தத்தை வைணவ சம்பிரதாயம் ஒத்துக்கொள்வதில்லை. தங்கள் தங்கள் அறிவினால் அறியப்படுகிற மற்ற தெய்வங்களைத் தொழுதாலும் பலன் பெறலாம். ஆனால் அவரவர் விதிவழி அடையச்செய்வது அந்த தெய்வங்களினுள்ளும் அந்தர்யாமியாய் நிற்கும் திருமாலே என்றுதான் அர்த்தம் சொல்வார்கள்.

English Translation

Let each one offer worship as he deems fit, and each one shall attain his god's feet. For our Lord, who stands above these! gods accepts the offerings made to the and bids them deliver the fruit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்