விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாம் அவன் இவன் உவன்,*  அவள் இவள் உவள் எவள்* 
  தாம் அவர் இவர் உவர்,*  அது இது உது எது*
  வீமவை இவை உவை,*  அவை நலம், தீங்கு அவை* 
  ஆமவை ஆயவை ஆய்*  நின்ற அவரே.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாம் - நாம் முதலான தன்மைப் பொருள்களும்
அவன் இவன் உவன் -அவன் இவன் உவன் என்கிற ஆண்பால்  சுட்டுப்பொருள்களும்
அவள் இவள் உவள் - அவள் இவள் உவள் என்னும் பெண்பால் சுட்டுப் பொருள்களும்
எவள் - எவள் என்கிற பெண்பால் வினாப்பொருளும்
தாம் - தாம் என்னும் பன்மைப் பொதுப்பொருளும்

விளக்க உரை

 ‘நாம்’ என்ற பெயர்ப்பொருளும், ‘அவன் இவன் உவன்’ என்னும் ஆண்பாற்பெயர்ப்பொருள்களும், ‘அவள் இவள் உவள் எவள்’ என்னும் பெண்பாற்பெயர்ப்பொருள்களும், தாம் அவர் இவர் உவர்’ என்னும் பலர்பாற்பெயர்ப்பொருள்களும், ‘அது இது உது எது’ என்னும் ஒன்றன்பாற்பெயர்ப்பொருள்களும், அழிகின்ற அந்தப் பொருள்களும் இந்தப் பொருள்களும் உந்தப் பொருள்களும், நல்ல பொருள்களும் தீய பொருள்களும், உண்டாகும் பொருள்களும் உண்டான பொருள்களும் ஆகி நிற்கின்ற எல்லாப்பொருள்களும் அவ்விறைவரேயாவர் என்றவாறு.

English Translation

He stands as the "he" there' here and in between the 'she' there, here in between and wherever the things that are –here, there, in between and wherever –he is their good, bad, indifferent, their past and their future.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்