விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலன் அது உடையன் இது*  என நினைவு அரியவன்* 
    நிலனிடை விசும்பிடை*  உருவினன் அருவினன்*
    புலனொடு புலன் அலன்,*  ஒழிவு இலன் பரந்த*  அந்- 
    நலன் உடை ஒருவனை*  நணுகினம் நாமே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அது இலன் (என) - அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும்
இது உடையன் என - இந்தப் பொருளையுடையவன் என்றும்
நினைவு அரியவன் - நினைப்பதற்கு அருமைப்பட்டவனாகியும்
நிலன் இடை - பூமி முதலான (கீழ்) உலகங்களிலும்

விளக்க உரை

‘அதனை இல்லாதவன்; இதனையுடையவன்,’ என்று இரு தன்மையாலும் நினைக்க முடியாதவன்; காணப்படுகின்ற இவ்வுலகமும் ஆகாயத்திலுள்ள தெய்வலோகங்களும் முதலாக எல்லா உலகங்களிலுமுள்ள உயிரல்பொருள்களை எல்லாமுடையவன்; உயிர்ப்பொருள்களை எல்லாமுடையவன்; காணப்படுகின்ற எல்லாப்பொருள்களும் தானாக இருப்பவன்; அவ்வாறு இருப்பினும், அப்பொருள்களின்குணங்களும் குற்றங்களும் தன்னைச் சாராமல் இருப்பவன்; இவ்வகையில் எல்லாப்பொருள்களையும் விட்டு நீங்காதவனாகி எங்கும் பரந்திருக்கின்ற அந்நற்குணங்களையுடைய ஒப்பற்ற இறைவனை நாம் சேர்ந்தோம்.

English Translation

He cannot be thought of as "this" and "not that". He is the sentient and insentient, in high and in low. He is in the senses, but not of them and endless. Let us seek the good one, he is everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்