விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மனன்அகம் மலம் அற*  மலர்மிசை எழுதரும்* 
    மனன் உணர்வு அளவு இலன்,*  பொறி உணர்வு அவை இலன்* 
    இனன் உணர், முழு நலம்,*  எதிர் நிகழ் கழிவினும்* 
    இனன் இலன் எனன் உயிர்,*  மிகுநரை இலனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மனனகம் - மனத்திலேயிருக்கிற
மலம் அற - (காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்)
மலர் - மலர்ந்ததாகி
மிசை எழ தரும் - மேலே மேலே விருத்தியடைகிற
மனன் உணர்வு - மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால்

விளக்க உரை

‘மனத்தின் குற்றங்கள் எல்லாம் நீங்க, பின்பு மலர்ந்து மேலே எழுகின்ற மனத்தினுடைய யோக ஞானத்தால் அறியப்படுகின்ற ஆத்துமாவின் தன்மையினையுடையவன் அல்லன்; இந்திரியங்களால் அறியப்படுகின்ற உலகத்துப் பொருள்களின் தன்மையினையுடையவன் அல்லன்; எதிர்வு நிகழ்வு இறப்பு என்னும் முக்காலங்களிலும் தனக்கு ஒத்தாரை இல்லாதவன்; மிக்காரையும் இல்லாதவன்; ஞான ஆனந்தமயமாக இருப்பவன்; இத்தகைய இறைவன் என்னுடைய சிறந்த உயிர் ஆவான்’ என்றவாறு.

English Translation

He cleanses the heart, makes it blossom and grow, he is beyond the ken of thought, feeling and senses, He is pure consciousness, all goodness, and eternal. He has no peer or superior, he is all our souls.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்