விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உயர்வு அற உயர் நலம்*  உடையவன் எவன் அவன்* 
    மயர்வு அற மதி நலம்*  அருளினன் எவன் அவன்*
    அயர்வு அறும் அமரர்கள்*  அதிபதி எவன் அவன்* 
    துயர் அறு சுடர் அடி*  தொழுது எழு என் மனனே! (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் மனனே - எனது மனமே!
உயர்வு அற - (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி
உயர் - உயர்ந்த
நலம் - (ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை.
உடையவன் - (சுயமாக) உடையனானவன்

விளக்க உரை

உரை:1

என் மனமே, தேவர்கள் முதலிய மற்றையோருடைய மேன்மைகள் முழுதும் இல்லை என்று கூறலாம்படி மேன்மேல் உயர்ந்துகொண்டே செல்லுகின்ற நற்குணங்களையுடையவன் யாவனோ அவன், என்னிடத்துள்ள அறிவின்மையாவும் நீங்க, பத்தியின் நிலையை அடைந்த அறிவைத் தந்தான்; அந்த அறிவைத் தந்தவன் யாவனோ அவன், மறதி என்பது சிறிதும் இல்லாத நித்தியசூரிகட்குத் தலைவன்; அந்நித்தியசூரிகட்குத் தலைவன் யாவனோ அவனுடைய, எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற ஒளி பொருந்திய திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலினின்றும் கரை ஏறுவாய்.

உரை:2

எனது மனமே உயர்த்தி இல்லதாபடி உயர்ந்த கல்யாண குணங்களை உடையனானவன் யாவனொருவனோ? அஜ்ஞானம் நசிக்கும்படி ஞானத்தையும் பக்தியையும் கிருபை பண்ணினவன் யாவனொருவனோ? மறப்பு இல்லாத நித்ய சூரிகளுக்கு சுவாமி  யாவனொருவனோ? அந்த எம்பெருமானது துயர் அறப் பெற்ற சோதிமயமான திருவடிகளை வணங்கி நீ கடைத்தேறக்கடவை.

English Translation

Arise, O heart, worship the feet of the one, who is higher than the highest good, who is the Lord of the ever-wakeful celestials, who dispels all doubt and grants pure knowledge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்