- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மின்இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,*
தன்அடியார் முன்பும் தரணி முழுதுஆளும்,*
கொல்நவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்*
தன்நிலைமை எல்லாம் அறிவிப்பன்,* -தான்முனநாள்-
காணொளி
பதவுரை
மின் இடையார் சேரியிலும் - ஸ்த்ரீகள் இருக்கும் திரள்களிலும்
வேதியர்கள் வாழ்வு இடத்தும் - வைதிகர்கள் வாழுமிடங்களிலும்
தன் அடியார்முன்பும் - அவனது பக்தர்கள் முன்னிலையிலும்
தரணி முழுதும் ஆளும் கொல் நலிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் - பூ மண்டலம் முழுவதையும் ஆள்கின்றவராயும் கொடிய படைகளை யுடையவராயுமிருக்கிற அரசர்களுடைய ஸபைகளிலும்
நாடு அநத்து - மற்றுமு தேசமெங்கும்
விளக்க உரை
ஆண்டாள் ஆய்ச்சிமார்போன்ற பெண்ணரசிகளும், பெரியாழ்வார் வ்யாஸர் பராசர்ர்போன்ற வைதிகர்களும், இளையபெருமாள் ப்ரஹ்லாதன்போன்ற பக்தர்களும், குலசேகரப் பெருமான் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்ற அரசர்களும் இவனுடைய பெருமேன்மைகளைச் சொல்லிக்கொண்டு ப்ரமித்துக் கிடப்பர்களே, அங்கங்கெல்லாம் நான் சென்று அவனைப்போன்ற நிர்க்குணன் இவ்வுலகில் எங்குமில்லை“ என்று பறையடித்து எல்லாரும் அவனைக் கைவிடும்படி பண்ணி விடுகிறேன் பாருங்களென்கிறார்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்