விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*  வாசுதேவன் மதுரைமன்னன்*  நந்த- 
  கோன் இளவரசு கோவலர் குட்டன்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 
  வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி*  மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்* 
  தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வரன் - பரமபதத்துக்கு
இள அரசு - யுவராஜனாயும்
வைகுந்தர் - அப்பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளுக்கு
குட்டன் - பரிந்து நோக்கவேண்டும்படியான பருவத்தையுடையானாயும்
வாசுதேவன் - வஸுதேவர்க்கு மகனாகப் பிறந்தவனாயும்

விளக்க உரை

கண்ணபிரானது குழலிசையைக்கேட்ட மேலுலகத்து மாதர் தங்களிருப்பிடத்திலே இருக்கமாட்டாமல் கண்ணனிருக்குமிடத்தில் கூட்டங் கூட்டமாக ஓடி வந்து அக்குழலோசையை நன்றாக கேட்ட பிறகு அவர்களது மனம் நீர்ப்பாண்டமாய் உருகிற்று; கண்களினின்றும் ஆநந்த பாஷ்பங்கள் துளிர்த்தன; கூந்தல் அவிழ்ந்தன; நெற்றி வேர்த்தது; இப்படிப்பட்ட விகாரங்களை அடைந்துகொண்டே அவ்விசையைக் கேட்டுக்கொண்டு மயங்கிக்கிடந்தனரென்க. பரமபதத்தில் எம்பெருமான் நித்ய்ஸூரிகளைத் தலைவராக்கி அவர்களின் கீழே தன்னையமைத்துக்கொண்டு அவர்களுக்கு நிர்வாஹகனாயிருக்குந்தன்மை பற்றி வானிளவரசு என்றார்; “திருவனந்தாழ்வான் மடியிலும் ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழிலும் பெரிய திருவடி சிறகின் கீழிலுமாயிற்று இத்தத்துவம் வளர்வது” என்பது பட்டரருளிச் செயலாம். அந்த ஸூரிகள் இவன் மேலுள்ள பரிவினால் குழந்தைகளுக்குக் குசலம் கோருவது போல அநவரதம் இவனுக்கு மங்களாசாஸநம் பண்ணுந்தன்மைபற்றி வைகுந்தக் குட்டன் என்றார்; வைகுந்தர்+குட்டன்;--”சில விகாரமாமுயர்திணை” என்பது விதி. பரமபதத்தில் ஸ்வதந்திரர் ஒருவரு மில்லாமையால் அங்கு இளவரசராயிருப்பது, தன்னுடைய ஆச்ரித பாரதந்திரியத்துக்கு ஒக்கும்; இவ்விபூதியிலுள்ளாரடங்கலும் ஸ்வதந்திரராகையாலே, ஈரரசு அறுத்துக் கொண்டு மன்னனாயிருக்கவேண்டுதலால் மதுரை மன்னன் என்றார். இடைச்சேரியிலுள்ள பஞ்சலக்ஷம் குடிக்கும் அரசர் நந்தகோபராகையாலே இவனை நந்தர்கோனிளவரசு என்றார்.

English Translation

Vasudeva, the Prince of high heavens, the child of Vaikunta, the king of Madura is Govinda, the prince of Nandagopala, the child of the cowherd clan. When he played his flute, young celestial dames came together in hordes, their hearts melting, their eyes misty, their honey-laden flower coiffure loosening, their foreheads perspiring as they listened.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்