விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்,*
  இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே,*
  கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்,*
  என் இதனைக் காக்குமா? சொல்லீர்,*  -இது விளைத்த-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் செவி தனக்கே - என்னுடைய காதுக்கு மாத்திரம்
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும் - கொலை செய்ய வல்ல வேலைக் காட்டிலும் கடூரமாகி நெடுகா நின்றது
இதனை காக்கும் ஆ என் - இந்த ஆபத்திற்குத் தப்பிப் பிழைக்கும் வழி என்ன?
சொல்லீர் - (ஏதாவது உபாயம் உண்டாகில்) சொல்லுங்கள்.

விளக்க உரை

மாட்டின் கழுத்தில் தொங்கும் மணியை மூன்றடிகளாலே கூறுகின்றாள். நாகின்மேலே பித்தங்கொண்டு காமித்து வருகின்ற காளையின் புறங்கழுத்திலுள்ள முசுப்பின்மேலே மநோஹரமாகக் கட்டப்பட்டு ஸாயங்காலத்தில் இடைவிடாது சப்தித்துக் கொண்டே யிருக்கிற மணியின் ஓசையும் வந்து செவிப்பட்டு, செவியிலே சூலத்தைப் பாய்ச்சினாற்போலே ஹிம்ஸை பண்ணா நின்றது. அவ்வோசை ஓய்ந்தபாடில்லை, நெடுகிச் செல்கின்றதே! என்கிறாள. கடலோசை குழலோசை முதலியனபோல விடைமணி யோசையும் விரஹிகளுக்கு உத்தீபகமாதல் அறிக.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்