விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாவலம் பெரிய தீவினில் வாழும்*  நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்* 
    தூ வலம்புரி உடைய திருமால்*  தூய வாயிற் குழல்-ஓசை வழியே* 
    கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப*  உடல் உள் அவிழ்ந்து*  எங்கும்- 
    காவலும் கடந்து கயிறுமாலை*  ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் - அழகிய;
பெரிய - விசாலமான;
நாவல் தீவினில் - ஜம்பூத்வீபத்தில்;
வாழும் - வாழாநின்றுள்ள;
நங்கைமீர்கள் - பெண்காள்;

விளக்க உரை

-உப்புக்கடல், கருப்புக்கடல், கள்ளுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நீர்க்கடல் என்ற ஏழுகடல்களாலுஞ் சூழப்பட்ட எழுதீவுகளுக்கு, முறையே ஜம்பூத்வீபமென்றும், பலக்ஷத்வீப மென்றும், சால்மலத்வீப மென்றும், குசத்வீப மென்றும், குரெளஞ்சத்வீப மென்றும், சாகத்வீப மென்றும், புஷ்காத்வீப மென்றும் பெயர். இவற்றுள் ஜம்பூத்வீகம் மற்ற எல்லாத்தீவுகளுக்கும் நடுவிலுள்ளது; அதன் நடுவில், மேரு என்னும் பொன் மலையுள்ளது; அதனைச் சுற்றியுள்ள இளாவருக வருஷத்தில் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு மரங்களுள்ளன; அவற்றிலொன்றாகிய நாவல் மரம்-ஜம்பூத்வீப மென்று இத்தீவின் பெயர் வழங்குதற்குக் காரணமாயிற்றென்று புராணங்கூறும். [ஜம்பூ-நாவல்.] மற்றைத் தீவுகள் பலாநுபவத்திற்கே உரியவையாகயாலும், இத்தீவு பலன்களுக்குச் சாதகமான கருமங்களை அனுட்டித்தற்கு உரிய இடமாகையாலும் இத்தீவு ஒன்றே சிறப்புறும்; இத்தீவில் நவமகண்டமான பாரதவருஷத்துக்கன்றோ இவ்வுரிமை உண்டெனில்; ஆம், இத்தீவுக்கு இக்கண்டம் முக்கியமானமைபற்றி இச்சிறப்பை இத்தீவுக்கு உள்ளதாகச் சொல்லக் குறையில்லை; இத்தீவினில் மானிடப்பிறவி படைப்பது அரிய பெரிய தவங்களின் பயனாகுமென்பர், அப்படிப்பட்ட தவங்களைச் செய்து இத்தீவில் பிறந்த பெண்காள்! நீங்கள் செய்த தவமெல்லாம் என்ன பயன் படைத்தன? உங்களைப் போல் பல பெண்கள் திருவாய்ப்பாடியிற் பிறந்து பகவத்விஷயத்தில் அவகாஹித்தபடியைப் பார்த்தால் உங்களுக்கு என்ன பூர்த்தி உள்ளதாகச் சொல்லக்கூடும்? என்ற கருத்துப்பட “நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்!”” என விளித்தது. கண்ணபிரான் வேய்ங்குழலை வாயில்வைத்து ஊத, அதனோசையைக்கேட்ட, இடைப்பெண்கள் உடலிளைத்து மனமுருகி, தங்களுக்குக் காவலாக வீட்டிலுருக்கின்ற மாமியார் மாமனார் முதலியோரையும் அலக்ஷியம் பண்ணிவிட்டுக் கண்ணன் குழலூதுமிடத்தேறப் புகுந்து; ஒரு கயிற்றிலே அடரப் பூக்களை ஒழுங்குபடத் தொடுத்தாற்போல வரிசையாக நின்று கண்ணன் முகத்தைக் கண்டவாறே ‘நாம் நமது காமத்தை இங்ஙனே வெளிப்படையாக்கினோமே’ என்று வெள்கி, அவன் முகத்தை முகங்கொண்டு காணமாட்டாமல் தலைகவிழ்ந்து தரையைக்கீறி நின்றனரென்க. வழியாவது-ஓரிடத்தினின்றும் மற்றோறிடத்தை அடைவிப்பது; இப்பெண்களை அவ்வாறு செய்தது குழலொசையாகையால், “குழலொசை வழியே”” என்றாரென்க. குதுகலிப்ப = ******** என்றபடி. முதலடியில் ”நங்கைமீர்கள்” என்றவிடத்து, கள்-விகுதிமேல் விகுதி. அற்புதம்-***.

English Translation

O Ladies living in the great continent of Jambu, listen to this wonder! When the Lord Tirumal, bearer of the pure right-coiled conch, placed a flute on his lips and player, little cowherd-girl’s tender breasts rose; their hearts fluttered; they broke the cordons and stood roped like a garland around him, hanging their heads in shame.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்