விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,*
  பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,*

  மன்னும் வளநாடு கைவிட்டு,*  -மாதிரங்கள்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

போர் வேந்தன் - ரணாசூரனாகிய இராமன்
தன்னுடைய தாதைபணியால் - தன் தகப்பனான சதரதனுடைய சொற்படி.
அரசு ஒழிந்து - ராஜ்யமாள்வதைத்தவிர்ந்து (காட்டுக்குப் புறப்பட்டபோது)
பொன் நகரம் - அழகிய அயோத்யாபுரியிலுள்ளாரடங்கலும்.

விளக்க உரை

ஆசையின் மிகுதியாலே நாணந்தவிர்ந்து நாயகன் பின்னே போவதும், நாயகனை பலாத்காரத்தாலே தனக்காக்கிக் கொள்வதும் நாயகளைப் பெறுதற்கு அரிய பெரிய ஸாதநங்களை அநுஷ்டிப்பதும் இவையெல்லாம் மடலூர்வதற்குப் பர்யாயமேயாம் என்பது ஆழ்வார்திருவுள்ளம். தமிழர்கள் ஏதோ எழுதி வைத்திருக்கிறபடி மடன்மாவேறினால்தான் மடலூர்ந்த்தாக இவருடைய அபிப்பிராயமில்லை, ஸ்த்ரீகளுக்கு இன்றியமையாத ஸ்வரூபமாகிய நாணத்தைக்காத்து மரியாதை வழுவாமல் நிற்கிறநிலை குலைந்து நாணம் நீங்கினபடியை வெளியிடுகின்ற செய்தி எதுவாயிருந்தாலும் அது மடலூர்வதொக்குமென்றாயிற்று ஆழ்வார் திருவுள்ளம்பற்றியிருப்பது. அப்படி நாணந்துறந்து அதிப்ரவருத்தி பண்ணின பெண்ணரசிகளின் சரித்திரம் வடமொழியில் இதிஹாஸ புராணங்களில் எராளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றதில் நாலைநது பெண்களுடைய செய்தியை எடுத்துச்செல்ல உத்தேசிக்க ஆழ்வார், முதலில ஸீதாபிராட்டியின் நடத்தையை எடுத்துக்காட்டுகின்றார்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்