விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்ன அறத்தின் பயனாவது?,*  ஒண்பொருளும்-

    அன்ன திறத்ததே ஆதலால்,*  -காமத்தின்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் பொருளும் அன்ன திறதத்தே - சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கொதத்தேயாம்
ஆதலால் - இப்படி தர்ம அர்த்தங்களாகிய இரண்டு புருஷார்த்தங்களுக்கும் காம்மே பயனாகத் தேறுவதனால்
காமத்தின் - அக்காம புருஷார்த்தத்தினுடைய
மன்னும் வழிமுறையே - நிலை நின்றவழியாகிய பகவத் காமமார்க்கத்திலே
நாம் நிற்றும் - நாம் ஊற்றமுடையரா யிருப்போம்.

விளக்க உரை

(ஆதலால் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும் நாம்) நான்கு புருஷார்த்தங்களில் மோக்ஷமென்பது முதலிலேயே தள்ளுண்டது, தருமமும் அர்த்தமும் காமஸித்தியையே பயனாகக் கொண்டன, ஆகவே, காமபுருஷார்த்த மொன்றே முக்கியம், மற்ற அறம் பொருள்கள் இதற்குச் சேஷபூதம் – என்று இதுவரையில் நிரூபிக்கப்பட்டதாதலால் நாம் காமபுருஷார்த்தத்தையே கைக்கொள்வோமானோம், அது தன்னிலும் ஹேயமான விஷயாந்தர காமமன்றிக்கே வேதாந்த விஹிதமாய் உத்தேச்யமாய் சாச்வதபலமான பகவத்விஷய காமத்தைக் கைக்கொண்டோம் என்று ஆழ்வார் தமது உறுதியைக் கூறித்தலைக்கட்டினாராயிற்று. “சேமநல்வீடும் பொருளுந் தரும்முஞ் சீரிய மற்காம்மும் என்றிவை நான்கென்பர் – நான்கினுஞ் கண்ணுக்கேயாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான், வாமநன் சீலன் இராமாநுசனிந்த மண்மிசையே“ என்ற நூற்றந்தாதிப் பாசுரம் இங்கே நினைக்கத்தகும்

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்