விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்*  கோலமும் அழிந்தில வாடிற்று இல* 
  வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல*  மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*
  முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்*  முன் நெற்றி நரைத்தன போல*  எங்கும்- 
  குடி ஏறி இருந்து மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கோலமும் அழிந்தில - (இயற்கையான) அழகும் அழியப்பெறவில்லை;
வாடிற்று - வாட்டமும் பெறவில்லை;
வடிவு ஏறு - அழகு அமைந்த;
திரு உகிரும் - திருநகங்களும்;
நொந்தில - நோவெடுக்கவில்லை;

விளக்க உரை

கண்ணபிரான் ஏழு நாளளவும் ஏகாகாரமாக மலையைத் தாங்கிக் கொணடு நிற்கச் செய்தேயும் கை, விரல், நகம் முதலியவையொன்றும் சிறிதும் விகாரமடையாமையால், இவன் மலையெடுத்து நின்றவிது தொம்பரவர் கூத்துப் போலே ஒரு கண்கட்டுவித்தையாகத் தோன்றுகின்றதே யன்றி ஒன்றும் மெய்க்கொள்ளப் போகவில்லை; மெய்யே மலையைச் சுமந்தானாகில் மேனிவாட்டமுண்டாகாதொழியுமோ? என்று சமத்காரந்தோற்றக் கூறுகின்றார் - முன்னடிகளில். சம்பிரதம் - ஒருவகை அஞ்சனத்தின் உதவியினால் ஒரு முஹூர்த்தகாலத்தளவு நிற்கும்படி மாஞ்செடி முளைக்கச்செய்தல் முதலிய இந்திரஜாலவித்தை. இப்படி இந்திரஜாலமெனக் கூறியதனால இச்செய்கை அபாரமார்த்திகம் என்று சிலர் மயங்கக்கூடுமே எனச் சஙகித்து, அதனைத் தெளிவிக்குமாறு அருளிச் செய்கின்றார் - பின்னடிகளால். அம்மலையிலுள்ள கார்மேகங்கள் அதன் சிகரத்திலே நிலச்செழிப்புண்டாம்படி எங்கும் வர்ஷித்து நீர் கழிந்தமையால் வெளுக்கப் பெற்று அச்சிகரத்தின் மேற்குடியிருக்கும் படியைப் பார்த்தால் அம்மலையின் முன்னெற்றி நரைத்துக் கிடக்கின்றதோ வென்று தோற்றா நின்றதென்று உத்ப்ரேக்ஷித்தவாறு. கண்ணபிரான் மழை தடுக்க மலையெடுத்தபோது அதன் மேல் இவ்வாறு மழையுண்டானதாகப் பொருளன்று; இதை உபலக்ஷண ரூப விசேஷணமாகக் கொள்க. குடியேறியிருந்து மழைபொழியும் - மழை பொழிந்து குடியேறியிருக்கும் என விகுதி பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது. வர்ஷியாமல் வெளுத்திருக்குங் காலத்திலும் மேகங்களிருக்குமிடம் மலைத்தலை யோரமாதல் அறிக. இதற்கு உள்ளுறை பொருள் ;- வேதாந்த நிஷ்டர்களான ஆசாரியர்கள் தம்மடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரஸமான அர்த்தங்களை உபதேசித்துத் தாங்கள் சுத்தஸ்வரூபர்களாக இருக்கும்படியைக் குறித்தவாறாம்.

English Translation

The fingers of his lotus-red hands were like fluttering pennons, but they neither lost their beauty nor became weak nor faded; nor did the shapely finger-nails hurt. The gem-hued Lord and the mount presented a spectacle. That mount is Govardhana, where the big clouds on the peaks in hordes everywhere appear to whiten at their temples, as they rain incessantly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்