விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,*
    முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,*
    அன்னவர்தம் மான்னொக்க முன்டாங் கணிமலர்சேர்,*
    பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,*
    மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,*
    இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,*
    மன்னிய மாமயில்போல் கூந்தல்,*  -மழைத்தடங்கண்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மருங்கு இருந்த மின் அனையை நுண் மருங்குல் மெல் இயலார் - அருகே யிருக்கிற மின்போல் ஸூக்ஷமமான இடையையுடைய மாதர்கள்
வெண் முறுவல் - (தங்களுடைய) வெளுத்த பற்களாலே
முன்னம் முகிழ்த்த - அபிப்பிராயத்தை ஸூசிப்பிக்கின்ற
முகிழ் நிலா வந்து அரும்ப - இளநிலாவந்து மேலே ப்ரஸிக்க
அன்னவர் தம் - அப்படிப்பட்ட மாதர்களுடைய
மான் நோக்கம் உண்டு - மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து

 

விளக்க உரை

அந்த நந்தவனங்கள் எப்படியிருக்கின்றவென்றால், எங்கே பார்த்தாலும் பொன்மயமான கல்ப வ்ருக்ஷங்கள் நிறைந்தும், அந்தக் கல்பவ்ருக்ஷங்கள் மலர்களில் மதுவைப்பருகுவதற்காக வண்டுகள் வந்து படிந்து இனிதாக ரீங்காரம் பண்ணப்பெற்றும் இருக்கின்றனவாம். அப்படிப்பட்ட சோலைகளிலே, கூந்தலழகும் கண்ணழகும் இடையழகும் அமைந்த மங்கையர்களுடனே கூடி யதேச்சமாக விளையாடுவர்களாம். (மன்னு மணித்தலத்து என்று தொடங்கி இன்னிசையாழ் பாடல் கேட்டின்புற்று என்னுமளவும் ஒரு வாக்கியர்த்தமாகக் கொள்க) நந்தவனங்களில் விளையாடிக் களைத்துப்போய் ஒரு திவ்ய மண்டபத்திற் சென்று வீற்றிருந்து அங்கு அப்ஸாஸ் ஸ்த்ரீகள் செவிக்கினியாக வீணாகானம் பண்ண அதனைக் கேட்டுக் களைதீர்ந்து ஆநந்திக்கும்படி சொல்லுகிறது. அந்த மண்டபங்கள் எப்படியிருக்கின்றன. வென்றால், கீழ்த்தரையெல்லாம் ரத்னங்களழுத்தப்பட்டு அந்த ரத்நமய ஸ்தலத்திலே கட்டப்பட்டும், மாணிக்கமயமான பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டும், மின்னல்போலே பளபளவென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே கொடுங்கைகள் கட்டப்பெற்றும், பவழ ஸ்தம்பங்கள் நாட்டப்பெற்றும் செம்பொன்னாற் செய்யப்பட்டு மிருக்கின்றனவாம், அப்படிப்பட்ட மண்டபத்துள் தேவமார்கள் வீணை வாசிக்க, மதுரமான அப்பாடலைக் கேட்டு இன்புறுகின்றனராம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்